full screen background image

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் ஓடிடியில் வெளியாகிறது..!

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் ஓடிடியில் வெளியாகிறது..!

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான, இவ்வாண்டின் மிகச் சிறந்த ரோம் – காம் பொழுதுபோக்குத் திரைப்படமான,  ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம்,  வரும் மே 27-ம் தேதி பிரத்யேகமாக தங்களது ஒடிடி தளத்தில் வெளியாவதாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. 

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் தமிழ் ரசிகர்களுக்கு தொடர்ந்து சிறந்த கதைகள்  மற்றும் ஒரிஜினல் திரைப்படங்களை வழங்குவதன் மூலம் தமிழகத்தில் சிறந்த ஓடிடி தளமாக புகழ் பெற்று வருகிறது.

அதன் சமீபத்திய வெளியீடான ‘டாணாக்காரன்’ விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேயும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. 

இந்த வரிசையில் தற்போது மே 27, 2022 அன்று இந்த ஆண்டின் மிகப் பெரிய ரோம் – காம் பொழுதுபோக்கு திரைப்படமான  ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தினை ரசிகர்களுக்கு வழங்குவதில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் பெருமை கொள்கிறது.

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் ரிலீஸுக்கு முந்தைய கட்டத்திலேயே ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியதோடு, பாக்ஸ் ஆபீஸிலும் சிறந்த வெற்றியைப் பெற்றது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரின் நடிப்புடன், இயக்குனர் விக்னேஷ் சிவனின் அட்டகாசமான உருவாக்கமும், அசத்தலான திரைக்கதையும், அனிருத்தின் துள்ளலான இசையும்  திரையரங்குகளில் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது.

சென்டிமெண்ட், வேடிக்கை, காதல் மற்றும் சார்ட் பஸ்டர் பாடல்கள் என அனைத்து அம்சங்களும் அடங்கிய இப்படம் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள, எதிர்பார்ப்பை கூட்டியுள்ள பொழுதுபோக்கு படைப்பான ‘O2’ படமும் விரைவில் தங்களது தளத்தில் வெளியாகுமென்று அறிவித்துள்ளது தெரிந்ததே..!

Our Score