இயக்குநர் சிகரம் கே.பி.யின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

இயக்குநர் சிகரம் கே.பி.யின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இந்திய திரையுலகின் ஜாம்பவான்களில் ஒருவரான கே.பி. என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப் பெற்ற இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், தனது கலைப் பயணத்தை தஞ்சை தரணியில் திண்ணை நாடகங்களில் ஆரம்பித்து மத்திய அரசு பணியில் அமர்ந்து மேடை நாடகங்கள் மூலமாக தனக்கென்று ஒரு தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டவர்.

இவரது மேடை நாடகங்கள் அந்தக் காலத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. பின்னர் தமிழ் திரையுலகில் தனி முத்திரையை பதித்தவர். இன்றுவரை தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறக்கும் பல நட்சத்திரங்களை உருவாக்கியவர் கே.பாலசந்தர்.

தென்னிந்திய தொழிலாளர்களின் நலன்களில் பெரும் அக்கறை செலுத்தினார். கே.பாலச்சந்தரின் மறைவு இந்திய திரையுலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை பிரிந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது அஞ்சலியை தெரிவித்து கொள்கிறோம்.

Our Score