இயக்குநர் சிகரம் கே.பி. மறைவுக்கு ஆந்திர, தெலுங்கானா முதல்வர்கள் இரங்கல்

இயக்குநர் சிகரம் கே.பி. மறைவுக்கு ஆந்திர, தெலுங்கானா முதல்வர்கள் இரங்கல்

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் மறைவுக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பாலசந்தர் இயக்கிய ‘மரோ சரித்ரா’ தெலுங்கின் சிறந்த படங்களில் ஒன்று. அவர் கடலோர ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் நகரத்தை பெரிதும் விரும்பினார். அவரது கனவு நகரம், பெரிய அளவில் புனரமைக்கப்படுவதை பார்க்காமலேயே அவர் காலமாகி விட்டது, துரதிர்ஷ்டவசமானது..." என்று கூறியுள்ளார்.

தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர ராவ் தனது இரங்கல் செய்தியில், "தென்னிந்திய படங்களில் உயர் தரத்தை புகுத்திய டைரக்டர்களில் பாலசந்தர் முக்கியமானவர்.." என்று கூறியுள்ளார்.

மத்திய விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத் துறை ராஜாங்க மந்திரி ஒய்.எஸ்.சவுத்ரி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் பல்வேறு தெலுங்கு திரையுலக பிரபலங்களும் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.