இன்றைய தினமான ஏப்ரல்-4 வெள்ளிக்கிழமையன்று 3 நேரடி தமிழ்ப் படங்களும் 1 மலையாள டப்பிங் படம், 1 தெலுங்கு டப்பிங் படம், 1 ஆங்கில டப்பிங் படம் என்று மொத்தம் 6 திரைப்படங்கள் ரிலீஸாகியுள்ளன.
1. மான் கராத்தே
இன்றைய ரிலீஸில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் படம் இது. எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனும், ஹன்ஸிகா மோத்வானும் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸின் கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் திருக்குமரன். படம் ரிலீஸுக்கு முன்பாகவே 27 கோடி லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2. 1 கன்னியும் 3 களவாணிகளும்
சிம்பு தேவனின் அடுத்த படம். மோகனா பிக்சர்ஸ் சார்பில் மு.க.தமிழரசு தயாரித்திருக்கிறார். அருள்நிதி தமிழரசு, பிந்து மாதவி நடித்திருக்கிறார்கள். கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எடிட்டிங் ராஜாமுகமது. வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். சிம்புதேவனின் படம் என்றாலே வித்தியாசம் இருக்கும் என்பார்கள். அது ஒன்றுக்காகவே படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
3. கூட்டம்
மம்மோத் மீடியா எண்ட்டெர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட்சார்பில் சுமந்தகுமார் ரெட்டி தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் நவீன் சந்திரா, கிஷோர், நாசர், சாய்குமார், பியா பாஜ்பாய், மகாதேவன், பிரகதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சுதாகர் ஒளிப்பதிவு செய்ய.. ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருக்கிறார். மதன் கார்க்கி, சுமதி, மோகன்ராஜ் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ஆந்திர நக்சலைட்டுகளின் வாழ்க்கைக் கதையை படமாக்கியிருக்கிறார்கள்.
4. வெற்றிப்பயணம்
இதுவொரு மலையாள டப்பிங் படம். முகேஷ், குஞ்சக்கோ போபன், சீதா நடித்திருக்கிறார்கள். தயாரிப்பு சேரலாதன். சுவாதி பாஸ்கர் இயக்கியிருக்கிறார்.
5. ரவுடி
இதுவொரு தெலுங்கு டப்பிங் படம். ராம்கோபால் வர்மா இயக்கியிருக்கிறார். நடிகர் மோகன்பாபுவின் சொந்தத் தயாரிப்பு. இவரும், இவருடைய மகன் மனோஜ் மஞ்சுதான் படத்தின் ஹீரோ. மோகன்பாபுவும் நடித்திருக்கிறார்.
6. கேப்டன் அமெரிக்கா
ஆங்கில டப்பிங் படம்