வரிவிலக்கு போனால் போகட்டும்..! முத்தக் காட்சி வேண்டும்..!

வரிவிலக்கு போனால் போகட்டும்..! முத்தக் காட்சி வேண்டும்..!

நான் சிகப்பு மனிதன் படம் U/A சர்டிபிகேட்டுடன் ரசிகர்களை சந்திப்பதாக முடிவாகியுள்ளதாம்..!

சென்சார் போர்டின் 10 பேர் கொண்ட ரீவைஸிங் கமிட்டி நேற்று படத்தைப் பார்த்துள்ளது. அவர்களும் படத்தில் இருக்கும் ஒரு சில காட்சிகளை நீக்கச் சொல்லியும், முக்கியமாக விஷால்-லட்சுமி மேனன் முத்தக் காட்சியையு்ம் நீக்கினால் யு சர்டிபிகேட் தருவதாகச் சொன்னார்களாம்..

ஆனால் அவைகளை நீக்கினால் படத்தின் திரைக்கதைக்கு பாதிப்பு வரும் என்று இயக்குநரும், தயாரிப்பாளரும் நினைத்ததால் படத்தை அப்படியே திரைக்கு கொண்டு வர முடிவு செய்துவிட்டார்கள்..

இதனால் வரிவிலக்கு கிடைக்காது என்பது தெரிந்தும் இத்தனை தைரியமாக அந்தக் காட்சிகள் அவசியம் வேண்டும் என்று தயாரிப்பாளரும், இயக்குநரும் நினைப்பதுதான் படத்தின் எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது..

வரட்டும்.. பார்ப்போம்..!

Our Score