full screen background image

நடிகை ‘சந்தோஷி’யின் புதிய அவதாரம்..!

நடிகை ‘சந்தோஷி’யின் புதிய அவதாரம்..!

சின்னத்திரையில் அனைவருக்கும் பிடித்தமான வீட்டுக்குக் கடைசி பொண்ணு கேரக்டரிலேயே நடித்து புகழ் பெற்றவரான சந்தோஷி, இப்போது சிறு தொழிலதிபராக வளர்ந்திருக்கிறார்.

பெண்களுக்குத் தேவையான ஆடைகள், ஆபரணங்கள் மட்டுமல்லாது பெண்களுக்கென பிரத்யேகமாக தனி அழகு நிலையம் மூன்றையும் உள்ளடக்கிய ஒரு ஆடை, ஆபரண, அழகு நிலையத்தைத் துவக்கியிருக்கிறார்.

006

‘ப்ளஸ்’(PLUSH) என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்தக் கடை சென்னை வளசரவாக்கத்தில் சமீபத்தில் திறக்கப்பட்டது. நடிகை ராதிகா மற்றும் நடிகை சங்கீதா இருவரும் கடையினை திறந்து வைத்தார்கள்.

இந்த தொழிலதிபர் வளர்ச்சி பற்றியும், தனது கடை பற்றியும் பேசிய நடிகை சந்தோஷி, “நான் சினிமாவில் கடந்த பதினைந்து வருடங்களாக இருக்கிறேன். ஆனால் சினிமா ஒன்று மட்டுமே என் கனவு இல்லை.. இன்னும் பல பெரிய கனவுகள் எனக்கு இருக்கின்றன. மீடியாவில் நான் இருப்பதால் எனக்கு மேக்கப்பிற்கான அழகு சாதனங்கள், ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் பற்றி நன்றாகவே தெரியும். ஆகவே.. இது தொடர்பாக ஒரு வியாபாரத்தில் ஈடுபட வேண்டும் என்று ரொம்ப நாளாக நினைத்துக் கொண்டிருந்தேன். அது இப்போதுதான் இந்த ப்ளஸ் மூலமாக சாத்தியமாகியிருக்கிறது.

சென்னையில் மற்ற எந்த இடத்திலும் இல்லாத ஒரு சிறப்பம்சம் இந்த பிளஸ்ஸில் இருக்கிறது. அது மணப்பெண்களுக்கான திருமண உடை, கவரிங் ஆபரணங்கள் ஆகியவற்றை இங்கேயே ஒரே இடத்தில் வாடகைக்கு பெற முடியும் என்பதுதான்.

மற்ற அழகு நிலையங்களில் இருந்து வேறுபட்டு இந்த ‘ப்ளஸ்’ கடையை பாரம்பரியத்துடன் வடிவமைத்திருள்ளேன்.. இந்த ஸ்டுடியோ முழுமைக்கும் பார்க்கும்போது இதற்கென்ற ஒரு தனி அடையாளம் இருக்கும்.

வடிவமைக்கப்பட்ட சேலைகள், விழாக்களுக்கான ஆடைகள், சல்வார், குர்த்தி, டி சர்ட் என அனைத்தும் இங்கே கிடைக்கும். அது மட்டுமல்ல.. நாங்கள் ஆடைகளையும், ப்ளவ்ஸ்களையும்கூட வடிவமைத்து தருகிறோம்…” என்கிறார் தன்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறிய சந்தோஷத்தோடு..! 

Our Score