full screen background image

மனோபாலாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ராதிகா..!

மனோபாலாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ராதிகா..!

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத குறையாக பெரும் வருத்தத்தில் இருக்கிறார் நடிகரும், இயக்குநருமான மனோபாலா.

பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக நடித்து வரும் மனோபாலாவுக்கு சமீபத்தில் திடீரென்று ஒரு மிகப் பெரிய கதாபாத்திரம் வந்து சேர்ந்தது.

ஒரு தெலுங்கு படத்தில் நடிகை ராதிகாவுக்கு ஜோடியாக அவர் நடிக்க வேண்டும் என்று அந்தப் படக் குழுவினர் அழைத்தார்கள். ராதிகாவை வைத்து பல படங்களையும், சீரியல்களையும் இயக்கியிருக்கும் மனோபாலா, இதுவரையிலும் ஒரு படத்தில்கூட ராதிகாவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை.

இப்போது ஒரு திரைப்படத்தில் அந்த நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறதே என்றெண்ணி மிகுந்த சந்தோஷத்துடன் செட்டுக்குப் போயிருக்கிறார் மனோபாலா. ஆனால் அன்றைய தினம் செட்டுக்கு வந்த நடிகை ராதிகா, தனக்கு ஜோடியாக நடிக்கப் போவது மனோபாலா என்பது தெரிந்தவுடன் தொடர்ந்து நடிக்க மறுத்து செட்டில் இருந்து வெளியேறிவிட்டாராம்.

இந்தச் சம்பவத்தால் நடிகர் மனோபாலா பெரிதும் அப்செட்டில் உள்ளார். இத்தனைக்கும் ராதிகாவும், மனோபாலாவும் 40 வருட கால நண்பர்கள். ரேடான் நிறுவனத்திற்காக பல சீரியல்களை இயக்கித் தந்திருக்கிறார் மனோபாலா. இப்படியிருந்தும் தனக்கு ஜோடியாக நடிக்க ராதிகா மறுத்துவிட்டதை எண்ணி பெரிதும் வருத்தப்பட்டாராம் மனோபாலா.

மனோபாலாவுடன் ஜோடியாக நடிக்க மறுத்ததற்கு ராதிகா சொன்ன காரணம்.. “திடீர்ன்னு எனக்கு ஜோடி மனோபாலான்னு சொன்னால் எப்படி நடிக்கிறது..? அவர்கூட ஜோடியா நான் இதுவரைக்கும் நடிச்சதே இல்லை. திடீரென்று அவருடன் இணைந்து நடிக்க ஒரு மாதிரியாக இருந்தது. அதனால்தான் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன்.. இதில் மனோபாலா வருத்தப்பட என்ன இருக்கிறது..?” என்று திருப்பிக் கேட்டிருக்கிறார்.

மனோபாலாவுடன் ஜோடியாக நடிக்க மறுத்த ராதிகா இன்னொரு திரைப்படத்தில் நடிகரும், இயக்குநருமான மாரிமுத்துவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சீரியலில் பொன்வண்ணனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஆனால், மனோபாலாவை மட்டும் தொங்கலில் விட்டது ஏன் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

 
Our Score