full screen background image

சாதாரணமான ஐந்து நண்பர்களின் அசாதாரணமான கதை ‘ஜின்’ திரைப்படம்

சாதாரணமான ஐந்து நண்பர்களின் அசாதாரணமான கதை ‘ஜின்’ திரைப்படம்

‘ஜின்’ என்ற இந்தப் படத்தின் தலைப்பு நம் மூலைக்கு வேலை தருகின்ற வகையில் அமைந்துள்ளது.

திகில் நிறைந்த அசாதாரணமான அமானுஷ்ய சக்திகளை பற்றிய கதை. மூன்று நாட்களில், ஐந்து நண்பர்கள் வாழ்வில் ஏற்படும் ஒரு அம்னுஷ்ய நிகழ்வை மையாகக் கொண்ட படம்தான் இந்த ‘ஜின்’.

ரைட் மீடியா ஒர்க்ஸ் மற்றும் சதீஷ் சந்திரசேகரனின் கதைகள் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை பற்றி இளம் அறிமுக இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் கூறுகையில், “கலையரசன், ‘மெட்ராஸ்’ ஹரி, காளி வெங்கட், அர்ஜுனன், ‘முண்டாசுப்பட்டி’ முனீஸ்  காந்த்  ஆகிய சாதாரணமான ஐந்து நண்பர்களின் ஒரு பிரயாணத்தில் ஏற்படும் அசாதாரணமான நிகழ்வை சுற்றி அமைந்ததே ‘ஜின்’ திரைப்படத்தின் கதை.

எம்.ஜி.ஆரி-ன் ‘அன்பே வா’, ரஜினியின் ‘தம்பிக்கு எந்த ஊரு’ படங்களின் ஷூட்டிங் எடுக்கப்பட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான பங்களாவில் படப்பிடிப்பு நடத்தினோம். திகில் படத்திற்கு ஏற்றவாறு இருண்டிருந்த அந்தக் கட்டிடத்தில் படப்பிடிப்பை நடத்தியதே திகிலாகத்தான் இருந்தது.

எனக்கு இந்த படத்தை எழுதுவதிலோ, படமாக்குவதிலோ எந்தவித சிரமும் ஏற்படவில்லை. ஏனெனில் இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாய் கொண்டது. அந்த ஐவரில் நானும் ஒருவன்..” என்கிறார் குறும்புச் சிரிப்புடன்.

நல்லா பீதியைக் கெளப்புறாங்கய்யா..!  

Our Score