தனமார் கிரியேஷன்ஸ் சார்பில் மலர் சுப்ரமணியம் தயாரித்துள்ள திகில், சஸ்பென்ஸ் கலந்த படம் ‘மகாராணி கோட்டை’.
ரிச்சர்டு ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் ஹனி பிரின்ஸ் மற்றும் அஸ்வினி இருவரும் ஹீரோயின்களாக நடித்திருக்கின்றனர்.
மேலும், பவர் ஸ்டார் சீனிவாசன், செந்தில், சங்கர்கணேஷ், கிங்காங், நெல்லை சிவா, கும்கி அஸ்வின், கஞ்சா கருப்பு, வேல்முருகன், வையாபுரி என்று நகைச்சுவை பட்டாளமே இந்த மர்மத்தில் பங்கெடுத்திருக்கின்றனர்.
யு.கே.முரளி இசையமைத்துள்ளார். டான்பாஸ்கோ படத்தொகுப்பு செய்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் வினோத்குமார்.
ஒரு கிராமத்து வீட்டில் பேயினால் நடக்கும் தொடர் விளைவுகளை திகில், மர்மம், சஸ்பென்ஸ் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
சென்னை, பெங்களூர், ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களிலும் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. தூத்துக்குடி கடல் பகுதியில் ஒரு கப்பலில் புதுமையான முறையில் சண்டை காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
பேய்ப் பட சீஸனில் கல்லா கட்ட நினைத்திருக்கும் இந்த ‘மகாராணி கோட்டை’, இந்த மாதமே திரைக்கு வரவிருக்கிறது.











