“என் மூஞ்சியை யார் பார்ப்பாங்க..?” – பாரதிராஜாவிடம் கேள்வி கேட்ட ராதிகா..!

“என் மூஞ்சியை யார் பார்ப்பாங்க..?” – பாரதிராஜாவிடம் கேள்வி கேட்ட ராதிகா..!

இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிகை ராதிகாவை முதன்முதலில் நடிப்பதற்காக அழைத்தபோது “என் மூஞ்சியை யார் பார்ப்பார்கள்..?” என்று திருப்பிக் கேட்டாராம்.

இது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை ராதிகா பேசியிருக்கிறார்.

நடிகை ராதிகா தனது திரையுகப் பயணம் பற்றிப் பேசுகையில், “வெளியில் இருந்து பார்த்தால் சினிமாவுலகம் எளிதாகவும், சின்னதாகவும்தான் தெரியும். ஆனால் உண்மையில் அது கடினமான பாதை. நீளமான வருடங்களைக் கடந்துதான் நான் இந்த உயரத்துக்கு வந்திருக்கிறேன்.

இயக்குநர் பாரதிராஜா நான் யாருடைய மகள் என்றே தெரியாமலேயே, பக்கத்து வீட்டுக்கு வந்தவர் வீட்டு வாசலில் நின்றிருந்த 15 வயதான என்னைப் பார்த்து “நடிக்க வர்றியாம்மா…?” என்று கேட்டார். எனக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அப்போது நான் அழகில்லாதவளாக இருந்தேன். “என் மூஞ்சியை யார் பார்ப்பார்கள்..?” என்றுதான் அப்போது நான் அவருக்குப் பதில் சொன்னேன்.

நான் இத்தொழிலில் அடியெடுத்து வைத்தபோதுகூட மோசமான தோல்வியைச் சந்தித்தேன். ஆனால் மிகச் சரியான நபர்களை உடன் வைத்ததால்தான் திரையுலகத்தில் இத்தனை நீண்ட பயணத்தை என்னால் தொடர முடிந்தது.

நான் ஏன் தொழில் முனைவோராக மாறினேன் என்றால் என்னுடைய நடிப்பு கேரியரை நானே கட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்பினேன். நிச்சயமாக ஒரு நாள் ரஜினிகாந்துக்கு அம்மாவாக நடிக்க என்னை அழைப்பார்கள் என்று எனக்குத் தெரியும். அதைத் தவிர்க்கவே நினைத்தேன்..

நடிகர்களைப் பற்றிக் குறிப்பாக ஒரு நடிகையைப் பற்றி பொதுமக்கள் ஒரு பொதுவான கருத்தோட்டத்தை தங்களிடத்தில் வைத்திருக்கிறார்கள். ஆனால், நான் என்னுடைய ஒவ்வொரு சாதனையிலும் முன்பைவிடவும் சிறப்பாகவே செய்து வந்திருக்கிறேன்..” என்று சொல்லியிருக்கிறார்.

Our Score