full screen background image

2016-ல் திரைப்பட கலைஞர்கள் பெற்ற விருதுகள்

2016-ல் திரைப்பட கலைஞர்கள் பெற்ற விருதுகள்

தமிழ்த் திரையுலக கலைஞர்களில் பலருக்கும் சென்ற ஆண்டு பல வழிகளிலும் விருதுகள் கிடைத்தன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவித்தது.

பிரான்ஸ் அரசு உலக நாயகன் கமலஹாசனுக்கு செவாலியே விருது அறிவித்தது.

‘விசாரணை’ படத்திற்காக மத்திய அரசு அந்தப் படத்தை தயாரித்த நடிகர் தனுஷுக்கு சிறந்தப் பட தயாரிப்பாளர் விருது, அந்தப் படத்தில் நடித்த நடிகர் சமுத்திரக்கனிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது, எடிட்டர் கிஷோருக்கு சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருது என மூன்று விருதுகளை வழங்கி கௌரவித்தது.

‘இறுதி சுற்று’ பட நாயகி ரித்திகா சிங் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

13-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

1000 படங்களை நிறைவு செய்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு நிஷாகந்தி விருது வழங்கி கௌரவித்தது கேரளா அரசு. மீண்டும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். ஆஸ்கார் விருது போட்டியில் ‘விசாரணை’ படம் பங்கேற்றது.

பதினேழாயிரத்து அறுநூற்று தொண்ணூற்று ஐந்து பாடல்களை பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் பின்னணி பாடகி பி.சுசீலா

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கு டாக்டர் பட்டம் கிடைத்து.

 

Our Score