full screen background image

கதை திருட்டு..! அமைதி காக்கும் கதாசிரியர்..!

கதை திருட்டு..! அமைதி காக்கும் கதாசிரியர்..!

ஒரு சினிமா கதையை காப்பியடிப்பது என்பது இப்போதெல்லாம் சர்வசாதாரணம்தா்ன்.. ஒரு சிலர் மட்டுமே முறைப்படி அனுமதி வாங்கிவிட்டுச் செய்கிறார்கள். பலரும் கேட்பதே இல்லை. வேற்று மொழிகளில் எடுத்துவிட்டு ‘உன்னால ஆனதை பார்த்துக்க போ’ என்று சொல்லிவிட்டு எஸ்கேப்பாகிவிடுவார்கள்.. கதை எழுதிய கதாசிரியர்தான் தேமே என்று அலைய வேண்டு்ம்.. நடிகரும், இயக்குநருமான யூகிசேதுவும் இப்படித்தான் வருத்தத்தில் இருப்பதாகத் தகவல்.

2002-ம் ஆண்டு அஜீத் நடித்து கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் உருவான ‘வில்லன்’ படத்தின் கதையாசிரியர் யூகிசேதுதான். படம் சூப்பர் டூப்பர் ஹிட்.. இது தல அஜீத்தின் கேரியர் உயர்வதற்கு பெரிதும் காரணமாக இருந்த படமும்கூட.. யூகிசேதுவும் சிறந்த கதாசிரியர்தான். ஹிந்தி படமான அங்குஷ் படத்தை முறைப்படி ரைட்ஸ் வாங்கி ;கவிதை பாட நேரமி்லலை; என்ற பெயரில் தயாரித்து இயக்கினார். அவருடைய இரண்டாவது படமான ‘மாதங்கள் ஏழு’ படமும் கதைக்காகவே விருதுகளை பெற்ற படம்..  யூகிசேதுவின் வேறு சில கதைகளை, அவருடைய நண்பர்களே ‘சுட்டு’ வெற்றிப் படங்களாகவும் ஆக்கியுள்ளனர்..

சென்ற ஆண்டு டிசம்பரில் ஹிந்தியில் வெளியான ‘தூம்-3’ படத்தின் கதையும், ‘வில்லன்’ படத்தின் கதையும் ஒன்றுதான் என்பது தெரிந்தது. படத்தின் கதையென்னவோ கிட்டத்தட்ட ஒன்றுதான்.. பேக்கிரவுண்டை மட்டுமே மாற்றியிருக்கிறார்கள். கேரக்டர் ஸ்கெட்ச்சுகள் ஒன்று போலவே இருக்கிறது. வேறொருவராக இருந்தால் இந்நேரம் பத்திரிகைகளைக் கூட்டி பேட்டிகள் வைத்து குமுறியிருப்பார்கள். யூகிசேது இவ்வளவு அமைதியாக இருக்கிறாரே என்று விசாரித்துப் பார்த்தால், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து மெளனம் சாதிப்பதால் எதுவும் நடக்கலையாம்..!

தூம்-3 படத்தைத் தயாரித்தது பாலிவுட்டின் மெகா தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா. படத்தை இயக்கியது விஜய் கிருஷ்ண ஆச்சார்யா.. கதைக்குச் சொந்தக்காரர்களாக இந்த இருவரின் பெயர்கள்தான் டைட்டிலில் வருகிறது..

‘தூம்-3’ படம் தயாரிப்பில் இருக்கும்போதே ‘தூம்-4’-ம் பாகத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க முடியுமா.. எவ்வளவு வேணும்னாலும் பணம் தர்றோம் என்று தல அஜீத்திடம் வந்து பேசினார்களாம் சோப்ரா தரப்பினர். 3-வது பாகமே ரிலீஸ் ஆகலை.. அதுக்குள்ள இந்த அழைப்பு எதற்கு என்று ‘தல’ தரப்பே அன்றைக்கு குழம்பிப் போயிருந்தது..! 

ரெண்டையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்தா.. இந்தக் கதையை வைச்சே இன்னொரு சினிமா எடுக்கலாம் போலிருக்கே..?

Our Score