full screen background image

இதுக்கு பேர்தான்யா அட்டர் காப்பி..!

இதுக்கு பேர்தான்யா அட்டர் காப்பி..!

கடந்த சில நாட்களாக ‘காப்பி’ என்கிற வார்த்தை டீக்கடைகளைத் தவிர  தமிழ்த் திரையுலகத்திலும், பத்திரிகையுலகத்திலும் அதிகமாக புழங்கிவருகிறது.

‘மூவி காப்பி’, ‘சோலோ காப்பி’, ‘கேரக்டர் காப்பி’, ‘ஸ்டோரி காப்பி’, ‘அட்டர் காப்பி’ என்று பலதரப்பட்ட ‘காப்பி’களும் கோடம்பாக்கத்தில் வலம் வரும் வார்த்தைகள்தான்.. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

பிளாக் எனப்படும் வலையுலகில் நமது நண்பரும், மருத்துவருமான ஒருவர் நம்பள்கி என்ற பெயரில் எழுதிவருகிறார். அவருடைய வலைத்தளம் இது : http://www.nambalki.com/ இந்த வலைத்தளத்தில் அவர் இன்றைக்கு எழுதியிருக்கும் இந்தக் கட்டுரை ‘காப்பி’ என்கிற வார்த்தையையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது.. அப்படியென்ன கதைன்றீங்களா..?

Priya-movie

‘பிரியா’ என்ற திரைப்படம் ரஜினி, ஸ்ரீதேவி நடித்து எஸ்.பி.முத்துராமன் இயக்கியது. 1978-ம் ஆண்டு ரிலீஸானது.. வெள்ளி விழா கண்டது.  இந்தப்  படத்தின் கிளைமாக்ஸில் ஸ்ரீதேவியை வில்லன் காரில் கடத்திச் செல்வார். ரஜினியும், அம்பரீஷும் வேறொரு காரில் பின் தொடர்ந்து சென்று அவர்களைப் பிடிப்பார்கள்.

மேடு போன்ற சாலைகளில் இரண்டு கார்களும் ஒன்றையொன்று விரட்டிக் கொண்டு செல்வதை மிக அற்புதமாக படம் பிடித்திருந்தார்கள். இந்தப் படம் வந்தபோது ஆங்கிலப் படத்தில் வருவது போன்ற கார் சேஸிங் காட்சிகள் இதில் இருப்பதாக அப்போதைய பத்திரிகை விமர்சனங்களும் எழுதியிருந்தன.

ஆனால் அந்த கார் சேஸிங் காட்சிகள் உண்மையாகவே வேறொரு ஆங்கிலப் படத்தில் இருந்து நெகட்டிவ்வாகவே உருவப்பட்டு, சொருகப்பட்ட காட்சிகள் என்று இப்போது தெரிய வந்துள்ளது.

பொதுவாக வேறு பட காட்சிகளை காப்பியடித்தால் அதே போன்ற லொகேஷனில் நமது நடிகர்களை வைத்து நமது நாட்டு கார்களை வைத்து ஷூட் செய்வார்கள். இதில் அந்த அளவுக்கெல்லாம் கஷ்டமே படாமல் அந்த ஆங்கிலப் படத்தின் நெகடிவ்களை பிரிண்ட் போட்டு அதனை சத்தமே இல்லாமல் ‘ப்ரியா’ படத்தோடு இணைத்திருக்கிறார்கள்.

ரஜினி காரை ஓட்டிச் செல்வது போலவும், இன்னொரு காரில் ஸ்ரீதேவி பதட்டத்துடன் முன் சீட்டில் இருக்க வில்லன் நடிகர் காரை ஓட்டுவதுமாக காட்சிகள் கட் டூ ஷாட்டுகளாக வரும். இடையிடையேதான் அந்த ஆங்கிலப் படத்தின் கார் சேஸிங் காட்சிகள் மிக அழகாக இணைக்கப்பட்டு எடிட்டிங் செய்யப்பட்டுள்ளன..

உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் bullitt என்ற இந்த ஆங்கிலப் படத்தின் புகழ் பெற்ற கார் சேஸிங் காட்சியை இந்த ஒளிப்படத்தில் பாருங்கள்..

பார்த்தாச்சா..? இப்போ நம்ம ‘ப்ரியா’ படத்தை இந்த ஒளிப்படத்தில் பாருங்கள்.. இதில் மணி 2:04:20-வது செகண்ட்டில் இருந்து பார்த்தீர்களேயானால் அந்த கார் சேஸிங் காட்சிகள் துவங்கும்..

இப்போது இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடம் இது பற்றி கேட்டால் ‘ஆமாம்’ என்றுதான் சொல்வார். அப்போது அதிகமாக ஆங்கிலப் படம் பார்க்கும் பழக்கம் தமிழர்களிடையே இல்லாததால் இது இத்தனை நாட்களாக தெரியவில்லை போலும்..!

முன்பு அதிக அளவுக்கு நம்மிடையே தொழில் நுட்பம் இல்லாததால், காடுகள்.. மலைகள்.. எரிமலை குழம்பு வெடிப்பது.. சிங்கம் வேட்டையாடுவது.. புலி பாய்வது.. சில இயற்கைக் காட்சிகள்.. கடல் அலை எழுவது.. பூகம்பம் ஏற்படுவது.. குண்டு வெடிப்பது போன்ற சில காட்சிகளை ஆங்கில திரைப்படங்களில் இருந்து சுட்டு எடிட்டிங் செய்து இணைப்பார்கள். இது அனைவருக்குமே தெரிந்ததுதான்.

ஆனால் இப்படி ஒரு ஸ்டண்ட் காட்சியையே வெட்டி, ஒட்டி நமக்கு பிலிம் காட்டியிருப்பார்கள் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இனிமேலும் யாராவது வேற எதையாச்சும் அட்டர்காப்பின்னு சொல்வீங்க..??????????

நன்றி : நண்பர் நம்பள்கி

Our Score