full screen background image

‘அன்னக்கிளி’ பாட்டுக்கு 5 நிமிடத்தில் மெட்டு போட்ட இசையமைப்பாளர்..!

‘அன்னக்கிளி’ பாட்டுக்கு 5 நிமிடத்தில் மெட்டு போட்ட இசையமைப்பாளர்..!

மிதுன், வைதேகி, சாம்பால், புலிபாண்டி என புதுமுகங்களுடன், அறிமுக இயக்குனர் ஜெயந்தன் இயக்கத்தில் GK சினிமாஸ் தயாரித்திருக்கும் ‘பட்ற’ திரைப்படம் வரும் மார்ச்-20-ம் தேதி வெளிவரவுள்ளது.

Patra_Movie_Posters_1

பிரபல கடம் வித்துவான் விக்கு விநாயக்ராமின் பேரனான ஸ்ரீகிருஷ்ணா இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

தன்னுடைய இசை பிரவேசம் பற்றி பேசிய ஸ்ரீகிருஷ்ணா, “எங்களது குடும்பம் கர்னாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்ட குடும்பம்.  சிறு வயது முதலே எனக்குள் சினிமா இசையமைப்பாளராக வேண்டுமென்ற ஆர்வம் இருந்ததால் மேற்கத்திய இசை, பாரம்பரிய இசை மற்றும் தாள இசை பயிற்சி என அனைத்தையும் கற்றுக் கொண்டேன். குறும்படங்கள், நாடகங்கள், மற்றும் விளம்பரங்கள் என பல்வேறு வகைகளில்  இசையமைத்து வந்தேன். இயக்குனர் ஜெயந்தன் எனக்கு இந்தப்  படத்திற்கு வாய்ப்பளித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய ‘அன்னக்கிளி’ பாடலுக்கு  இசையமைத்து மறக்க முடியாத நிகழ்வு. எப்பொழுதுமே எனது மெட்டுக்குத்தான் கவிஞர்கள் பாட்டெழுதுவார்கள். யுகபாரதி என்னை பாட்டுக்கு மெட்டமைக்க முடியுமா என்று சவால் விடுத்தார். ‘அன்னக்கிளி’ பாட்டை ஒவ்வொரு வரிக்கும் முதல் வார்த்தை படங்களின் பெயரை வைத்து எழுதினார். அனைவருக்கும் பிடித்துப்போய் என்னை உடனே இசையமைக்க சொன்னார்கள்.

குருட்டுத்தனமான தைரியத்தில் போட்ட மெட்டுதான்  ‘அன்னக்கிளி’ பாட்டு. முழு பாடலும்  5  நிமிடத்தில் தயாரானது. எனக்கு இது முற்றிலும் புது அனுபவமாய் இருந்தது. பின்னணி இசையும் நன்றாக வந்துள்ளது..” என்று பெருமையுடன் கூறினார் இசையமைப்பாளர் ஸ்ரீகிருஷ்ணா. 

Our Score