VVR Cinemask நிறுவனத்தின் சார்பில் வெங்கட்ராஜ் தயாரித்திருக்கும் படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்.’
இத்திரைப்படத்தில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் தீபக், புதுமுகம் நேஹா ரத்னாகரன், சென்ட்ராயன், குமாரவேல், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீஸர் வெளியானபோது அதில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் பேசியிருந்த வசனங்களும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்த்து. அந்த ஆர்வத்தின் விளைவாக படம் வெளியான நேற்றைய தினத்தின் முதல் காட்சியிலிருந்தே இந்தப் படத்திற்கு பொதுவான சினிமா ரசிகர்களின கூட்டம் அலை மோதியது.
ராஜேந்திரனை நடிக்க வைத்தது பற்றி பேசிய படத்தின் இயக்குநர் எஸ்.என்.சக்திவேல், “ராஜேந்திரன், இயக்குநரின் தேவைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் ஒரு அற்புதமான நடிகர். சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள அவருக்குக் கிடைத்துள்ள ஆதரவுதான் இப்படத்தில் அவரது முக்கியத்துவத்தையும் உயர்த்தியுள்ளது. வணிக ரீதியிலும் இந்தப் படத்திற்கு பெரிதும் உதவியுள்ளது.
இப்படத்தின் கதை எழுத ஆரம்பித்த நாள் முதலே அந்த மார்க் கதாப்பாத்திரத்தை அனைவரும் ரசிக்கும் வகையில் வடிவமைத்து வந்தோம். படத்தில் ராஜேந்திரனின் நடிப்பில் ‘பாட்ஷா’ படத்திற்கு டப்பிங் பேசும் காட்சியும், குளிக்கும் பெண்மணிக்கு சோப் எடுக்க உதவும் காட்சியும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
அனைவருக்கும் இப்படம் நிச்சயமாகப் பிடிக்கும். இப்படத்திற்கு பிறகு குழந்தைகளும் ராஜேந்திரனுக்கு ரசிகர்கள் ஆகிடுவார்கள். மார்க் என்ற கதாப்பாத்திரத்தில் நல்ல மார்க் வாங்குவார் ராஜேந்திரன். இவரின் நகைச்சுவை கலந்த நடிப்பிற்காகவே ரசிகர்கள் திரளாக தியேட்டருக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்…” என்று சந்தோஷத்துடன் கூறுகிறார் இயக்குநர் சக்திவேல்.