full screen background image

சிம்பொனி இசைக்க ஜெர்மனி செல்கிறார் ஜி.வி.பிரகாஷ்

சிம்பொனி இசைக்க ஜெர்மனி செல்கிறார் ஜி.வி.பிரகாஷ்

இளம் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பு.  இசை என பல்வேறு துறைகளில் பிராகசித்துக்  கொண்டே செல்கிறார். நடிப்பு துறையில் அவர் சிரத்தையுடன் மேற்கொள்ளும் முயற்சிகள், அவரை தேர்ந்த நடிகராக கரை சேர்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

நடிகராக மட்டுமே அவர் பயணம் மேற்கொள்வார். இனி இசை துறையில் கவனம் செலுத்த மாட்டார் என போலி ஆருடங்களும் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் ஜி.வி. என்று திரையுலகினரால் அன்போடு அழைக்கப்படும் ஜி.வி.பிரகாஷ் தற்போது சிம்போனி இசைக்காக ஜெர்மனி செல்ல இருப்பது அவர் இசை அமைப்பாளராக மென்மேலும் உயர இருப்பதை மெய்ப்பிக்கிறது.

“சர்வதேச சந்தையில் மிக முக்கியமான ஒரு நுகர்பொருளின் விளம்பரத்துக்காக நான் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளேன். உலக அரங்கில் சோபிக்கும் சில இசை அமைப்பாளர்களுடன்  என்னை ஒப்பிட்டு,  எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி.

ஜெர்மனியில் உள்ள Stuttgart  என்னும் நகரத்தில் மேற்கொள்ள இருக்கும் இசை பதிவுக்காக நான் விரைவில் அங்கு செல்ல உள்ளேன். இசையுலகில் பிரசித்தி பெற்றவர்கள் பலர் ஜெர்மனியில் தோன்றியுள்ளனர்.  இதில் மிக முதன்மையானவர் எனக் கருதப்படும் கோன்ராத் பௌமன் அவர்களின் இசை  காற்றில் மிதக்கும் ஜேர்மனி நாட்டில் என்னுடைய இசையும் கலக்கும் என்பதில் நிச்சயம் நான் பெருமையடைகிறேன்…” என்கிறார் ஜி.வி. பிரகாஷ்.

Our Score