full screen background image

‘தொப்பி’யில் அறிமுகமாகும் ரக்சாராஜ்..!

‘தொப்பி’யில் அறிமுகமாகும் ரக்சாராஜ்..!

மலையாள பட உலகம் நமக்கு பல்வேறு கதாநாயகிகளை தந்து இருக்கிறது. தற்போதைய வரவு  புதுமுகம் ரக்க்ஷாராஜ். அரபிக்கரையோரம் இருந்து வந்திருக்கும் பெரிய வரவு  இவர்தான்..

இயக்குநர் யுரேகாவின் இயக்கத்தில்  ராயல் ஸ்க்ரீன்ஸ் தயாரிக்கும்  ‘தொப்பி’ திரைப்படத்தில் அறிமுகமாகும் ரக்க்ஷா பரத நாட்டியம், குச்சுப்புடி, மோகினி ஆட்டம், மற்றும் பல நடன கலைகளில் பால்யத்தில் இருந்தே பயிற்சி பெற்றவர்.

சமூக துறை சார்ந்த படிப்பில் பட்டம் பயின்ற ரக்க்ஷா, அந்த கல்வியின் அடிப்படையில் மலையாள கலாச்சார துறை மற்றும் கலை நிலையம் மூலம் தனது நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தினார். ‘மாதபெயரம்பர’ என்ற அமைப்பின் மூலம் உலகெங்கும் சென்று தனது நடிப்பை மெருகேற்றிக் கொண்டார்.

தமிழ்ப் படங்கள் மீதும், தமிழ் மொழி மீதும் பேரார்வம் கொண்ட ரக்க்ஷா தனது அறிமுக   படமான ‘தொப்பி’ பற்றி பேசும்போது, “தொப்பி என் மனத்தைக் கவர்ந்த படம். ஒரு புதிய நடிகைக்கு அறிமுகத்தில் சிறந்த படமும் கதையும் அவசியம். அந்த வரிசையில் தொப்பி எனக்கு சிறந்த அறிமுகம் தந்திருக்கும் படம் என்றே நான் கருதுகிறேன். 

படப்பிடிப்பு நடந்த ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புத் தளத்தில் எனக்கு சிறந்த பாடங்கள் கிடைத்தன. என்னுடைய நம்பிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே இருந்தது. பட குழுவினர் ஒரு குடும்பம்போல் என்னிடம் பாசம் பாராட்டியதை என்னால் மறக்க முடியாது. திரையுலகில் மென்மேலும் சாதிக்க நினைக்கும் எனக்கு ‘தொப்பி’ மூலம் கிடைக்கும் பாராட்டு சிறந்த உரமாக இருக்கும்…” என நம்பிக்கை தெரிவித்தார்.

Our Score