full screen background image

வடம் – சினிமா விமர்சனம்

வடம் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தில் நடித்த நடிகர், நடிகையர் :

விமல் – வெற்றிவேல்

நட்டி நடராஜ் – ரத்தினவேல்

சனஷ்காஸ்ரீ – தேவகி​

முனிஷ்காந்த் – ஐமன்னன் (ரத்னவேலின் மாமா)

நரேன் – சந்தனவேல் (வெற்றிவேல் தந்தை)

இந்து – இந்துமதி (வெற்றிவேல் தாய்)

பாலா சரவணன் – பாலா

மதுசூதனன் – கர்ணன் – வில்லன்

தீபா சங்கர் – காவேரி (வெற்றிவேல் அத்தை)

தொழில் நுட்பக் குழுவினர் விவரம்:-

தயாரிப்பு – மாசாணி பிக்சர்ஸ்

தயாரிப்பு – ஆர்.ராஜசேகர்

எழுத்து – இயக்கம் – வி.கேந்திரன்

ஒளிப்பதிவு – பிரசன்னா எஸ்.குமார்

படத் தொகுப்புவி.ஜே.சாபு ஜோசப்

கலை இயக்கம் – வி.சசிகுமார்

இசை – டி.இமான்

பாடல் வரிகள் – ஞானகரவேல்

சண்டைக் காட்சிகள் – ஜி.என்.முருகன்

நடன இயக்குநர் – தினேஷ், தீனா ரூ சந்தோஷ்

காஸ்ட்யூமர் – பெருமாள் செல்வம்

ஆடை வடிவமைப்பாளர் – டோரத்தி ஜெய்

ஒலி வடிவமைப்பு – டி.உதயகுமார்

வி.எஃப்.எக்ஸ். – எம்.கே.ஸ்டுடியோஸ்

டி.ஐ. – இன்ஃபினிட்டி மீடியா

ஒப்பனை – சீராளன் மணி

இணை இயக்குநர் – பா.சண்முகம்

தலைமை அசோசியேட் – ராஜதுரை தங்கராஜ்

ஸ்டில்ஸ் – கே.ராஜ்

லைன் தயாரிப்பாளர் – கே.ஆர்.பாலமுருகன்

கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – ஆர்.பாண்டியன்

இணைத் தயாரிப்பாளர் – என்.சங்கர்

பத்திரிக்கை தொடர்பு – சதீஷ் – எஸ்2 மீடியா

சிவகங்கை மாவட்டத்தின் பின்னணியில் வட மஞ்சு விரட்டுதிருவிழாவை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

ஜல்லிக்கட்டு காளைகளின் கழுத்தில் பின்னலோடு சேர்த்து ஒரு கயிறாக கட்டுவதைத்தான் வடம்’ என்பார்கள். இந்தப் படம் ஒரு ஜல்லிக்கட்டு காளையை பற்றிய படம் என்பதால் அதற்கு ஏற்றவாறு வடம்’ என்று பொருத்தமாகப் பெயர் வைத்துள்ளார்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் சிங்கம்புணரி என்ற ஊரில் பெரிய மனிதர் நரேன். மனிதர்கள் மீது வைத்திருக்கின்ற பாசத்தையும் தாண்டி வாயில்லா ஜீவன்களான மாடுகள் மீது இவர் அபரிமிதமான பாசத்தை வைத்திருக்கிறார்.

வீட்டிலேயே மாடுகளை பராமரித்து வரும் கோசலையை வைத்து நடத்தி வருகிறார் நரேன். இவருடைய காளைதான் வருட வருடம் அந்தப் பகுதியில் நடக்கும் ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும். இவருக்குப் போட்டியாக சிவகங்கையில் வசிக்கும் நட்டி நட்ராஜூம் தன் பங்குக்கு ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்.

நட்ராஜின்  வீட்டில் இருந்த பசு மாடு கன்றுக்குட்டி போட்டதில் ஒரு கன்று ரொம்பவே நோஞ்சனாக இருக்கிறது. “அதை நம்மால் வைத்து பராமரிக்க முடியாது. நமக்கு அது தேவையில்லை…” என்று சொல்லி அதை எங்கேயாவது கொண்டு சென்று கொடுக்கும்படி வேலையாட்களிடம் சொல்கிறார் நட்டி நடராஜ்.

அந்த சின்ன கன்று குட்டி நரேனின் மகனான ஹீரோ விமலின் கண்ணில் படுகிறது. விமல் அந்தக் குட்டிக்கு பாண்டி முனி’ என்ற பெயர் வைத்து  ஆசையாக வளர்த்து வருகிறார். ஆனால், மற்ற மாடுகளைவிடவும் இந்த பாண்டி முனி வளர்ந்த நிலையில் ஜல்லிக்கட்டு காளையாகவே தெரிகிறது. அதனால் விமல் பாண்டி முனி’யை பல ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அழைத்துச் சென்று விருதுகளை பெறுகிறார்.

இதனால் நட்டி நட்ராஜூடன் விமலுக்கு குரோதம் வருகிறது. இதன் தொடர்ச்சியாக நட்ராஜை கொலை செய்த வழக்கில் சிக்கும் விமல், ஜெயிலுக்கு போய்விட்டு ஜாமினில் வெளியில் வருகிறார்.

அதே ஊரில் தன்னுடைய அக்காவுடன் இருக்கும் நாயகி அனஸ்காஸ்ரீ அவர் வளர்க்கும் ஒரு காளைக்கு மஞ்சு விரட்டு பயிற்சியை கொடுக்கும்படி விமலிடம் கேட்கிறார். முதலில் அதை மறுக்கும் விமல், நாயகியின் உறுதியை பார்த்து இரக்கப்பட்டு அந்தக் காளைக்கு பயிற்சி கொடுத்து வருகிறார்.

நட்டி நடராஜ் தான் வளர்க்க முடியாது என்று நினைத்து துரத்திவிட்ட கன்றுதான் இப்போது ‘பாண்டி முனி’யாக விமலிடம் இருப்பதை தெரிந்து கொண்டு அந்தப் பாண்டி முனி காளையைத் தன்னிடம் கொடுக்கும்படி கேட்கிறார். ஆனால் இதை நரேனும், விமலும் மறுத்து… “தர முடியாது” என்று சொல்கிறார்கள்.

இந்த நேரத்தில் விமலை கொலை செய்ய நட்டி நடராஜ் முயல… அந்த சண்டையின்போது விமலுக்கு ஒரு மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறார் நாயகி சனஸ்கா. தன்னுடைய காதலியே தன்னை கொலை செய்ய முயல்வார் என்று நினைக்காத விமல் கத்திக்குத்துப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.

ஹீரோயின் ஹீரோ விமலை ஏன் கொலை செய்ய முயல்கிறார்? நட்டி நடராஜிடம் பாண்டி முனி சென்று சேர்ந்ததா..? கடைசியாக நடராஜ் என்ன ஆனார்? – இந்த கேள்விகளுக்கெல்லாம் விடைதான் இந்த ‘வடம்’ என்ற திரைப்படம்.

‘வெற்றிவேல்’ என்ற கேரக்டரில் நடித்திருக்கும் விமல் வழக்கம்போல தன்னால் என்ன செய்ய முடியுமோ… எப்படி நடிக்க முடியுமோ அதையேதான் செய்திருக்கிறார். புதிதாக அவருடைய முகமும் உடல் வாகுவும் ஒரு ஆக்சன் ஹீரோவுக்கான அளவுகோளோடு வளர்ந்து இருக்கிறது. எப்படி இந்த மேஜிக்கை விமல் செய்தார் என்று தெரியவில்லை. ஆனாலும் நமது பாராட்டுக்கள். விமலின் முறுக்கு மீசை தோற்றமும், ஹீரோவுக்கான நடை உடை பாவனைகளும் இந்தப் படத்தில் நிறையவே இருக்கிறது. காதலில் மட்டும்தான் அவர் இன்னும் ஜெயிக்கவில்லை என்பது உண்மை.. பரவாயில்லை.. முழுக்க, முழுக்க காதலை மையப்படுத்திய படம் ஏதாவது விமலுக்குக் கிடைத்தால் நிச்சயம் அதில் அவர் ஸ்கோர் செய்வார் என்று நம்பலாம்.

ஹீரோயின் சனஸ்காஸ்ரீ, அவரது தோழியுடன் விமல் எங்கே போனாலும் பின்னாலேயே சென்று பார்த்து “ஐ லவ் யூ” என்பதை சொல்ல முடியாமல் தவிக்கின்ற பொழுது மிகவும் ரசிக்க வைத்திருக்கிறார். ஆனால் அவரும் இடைவேளைக்கு பின்பு எதற்காக ஹீரோவை தாக்கினேன் என்பதை சொல்லும்பொழுது தனது வீர நடிப்பையும் சென்டிமென்ட் பேச்சுக்களையும் பேசி நம்மை கவர்கிறார்.

நட்டி நடராஜ் தோல்வியை கொஞ்சமும் விரும்பாத ஒரு இளைஞராக படத்தில் வலம் வந்திருக்கிறார். தன்னுடைய மாமா முனீஸ்காந்தை அலட்சியம் செய்து அவரை மட்டம் தட்டி பேசும்போது ஒரு வில்லத்தனம் தானாகவே நட்டி நடராஜரிடம் வந்து சேர்ந்துவிட்டது. நட்டி நடராஜ் திரையில் இருக்கும் நேரம் மிக குறைவு என்றாலும் தன்னுடைய நடிப்பை ஆழமாகவும், அழகாகவும் பதிவு செய்து இருக்கிறார்.

முனீஸ்காந்த் காமெடியை எல்லாம் தூக்கி போட்டுவிட்டு ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்திலும் அதேபோல் தன்னுடைய அப்பாவித்தனமான மாமன் கேரக்டரை அழகாக செய்து இருக்கிறார்.

தன்னுடைய மகளிடம் திருமண நிச்சயதார்த்தம் நடக்கப் போகிறது என்று சந்தோஷமாக சொல்லிவிட்டு வந்து இங்கு நட்டி நட்ராஜிடம் அவமானத்தை எதிர்கொள்ளும்போது அவருடைய நடிப்பு நமக்கு ஒரு பரிதாபத்தை பெற்றுக் கொடுத்தது.

விமலின் அப்பாவாக நடித்திருக்கும் நரேன் ஊர் பெரியவர், ஒரு சிறந்த அப்பா என்கின்ற இரண்டு கேரக்டர் ஸ்கெட்ச்சுகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடைய அம்மாவாக நடித்திருக்கும் இந்துமதி, அத்தையாக நடித்திருந்த தீபா சங்கர், விமலின் நண்பனாக கூடவே வலம் வரும் பால சரவணன் என்று படத்தில் நடிக்கும் ஒவ்வொருவரும் தங்களது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஏற்ற நடிப்பை காண்பித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவில் மஞ்சு விரட்டு காட்சிகள் பரபரக்கின்றன. ஜல்லிக்கட்டு மைதானத்தில் மாடுகளை அடக்குவதை படமாக்குவது மிக, மிக கஷ்டம். ஆனாலும், ஒளிப்பதிவாளர் அந்த மஞ்சுவிரட்டு காட்சிகளை ரசிப்பது போல படமாக்கிக் கொடுத்திருக்கிறார். அவருக்கு இதற்காகவே நமது பாராட்டுக்கள்.

இமானின் இசையில் பாடல்கள் அனைத்துமே கேட்கக் கூடியதாகத்தான் இருக்கிறது. மிக எளிமையான தமிழ் வார்த்தைகளில் எழுதப்பட்டிருக்கும் பாடல் வரிகளும் நமக்கு திரும்பவும் கேட்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பின்னணி இசையிலும் காட்சிகளுக்கு ஏற்ற இசையை கொடுத்து சிறப்பு செய்திருக்கிறார் டி.இமான்.

மஞ்சு விரட்டு காட்சிகளை தொகுத்து அளித்திருக்கும் படத் தொகுப்பாளருக்கும் நமது பாராட்டுக்கள். டூயட் காட்சிகளில் மாண்டேஜ் ஷாட்டுகளையும் அழகாக தொகுத்து அளித்திருக்கிறார்.

மஞ்சு விரட்டு தமிழர்களின் வீர விளையாட்டு என்றாலும் இதன் மூலமாக பல இடங்களில் இப்போதும் சாதி சண்டைகளும், கொலைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அனைவருமே தமிழர்கள்தான். விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என்று பலரும் சொன்னாலும் சில இடங்களில் எல்லை மீறி இது போன்ற சம்பவங்கள் நடப்பது துரதிஷ்டவசமானது. அப்படி ஒரு கதையைத்தான் இந்த படத்தில் இயக்குநர் நமக்குக் கொடுத்திருக்கிறார்.

மஞ்சு விரட்டு காளைகள், வளர்ப்பு மாடுகளை கோசலையில் வளர்ப்பது… மாடுகளை உணவுக்காக வெட்டுவது கிராமப் புறங்களில் இருக்கும் பண்ணையார்தனம்… இடையில் ஒலிந்திருக்கும் காதல் என்று அனைத்தையுமே கலந்து நமக்கு கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

நிச்சயமாக இந்தப் படத்தை பார்க்கலாம்தான்!

RATING : 3.5 / 5

 

Our Score