full screen background image

விதார்த், ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘சொடக்கு’ திரைப்படம்!

விதார்த், ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘சொடக்கு’ திரைப்படம்!

தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி பிலிம் புரொடக்‌ஷன்ஸ் கூட்டு முயற்சியில், அதிரடி திரில்லர் படம் ஒன்றை தயாரிக்கிறார்கள்.

மாஸ்டர் பீஸ் நிறுவனம் வழங்கும் இப்படத்திற்கு ‘சொடக்கு’ என்று பெயர் வைத்துள்ளார்கள்.

இந்தப் படத்தில் நட்டி நட்ராஜ், விதார்த், ‘கயல்’ ஆனந்தி, ரக்‌ஷிதா மகாலட்சுமி மற்றும் பலர்  நடித்துள்ளனர்.

‘அமர்க்களம்’, ‘ஜெமினி’, ‘வசூல்ராஜா MBBS’ போன்ற பல ஹிட் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சரண், இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார்.

கதை, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் காமராஜ் மனோன்மணி.

அது என்ன ‘சொடக்கு’? ‘சொடக்கு’ போடற நேரத்துல எல்லாம் மாறிப் போச்சு.. “வாழ்க்கையே தலைகீழாக ஆயிடுச்சு”ன்னு சொல்லுவாங்க.

அப்படி ஒரு சொடக்கு போடுற நேரத்துல என்னென்ன நடந்தது என்பதுதான் இக்கதை.

நம்ம ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும் இது நடந்திருக்கும். இக்கதை நமக்கு ரொம்ப நெருக்கமாக இருக்கும்.

இதன் படப்பிடிப்பு முழுக்க, முழுக்க மலேசியாவில் தயாரிக்கப்பட்டது.

நாளை நடப்பது இன்றைக்கே நமக்கு தெரிந்தால் எப்படி இருக்கும்!

சுவாரசியமான இந்த நிகழ்வால் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்.. குழப்பங்கள் என்பது இயல்பு வாழ்க்கையை எப்படி எல்லாம் புரட்டி போடுகிறது..? எப்படி எதிர்கொள்வது என்பதை கதைக் களமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய திரைக்கதை அமைப்பாக ஒரு திரில்லர் அனுபவத்தை கொடுக்கும்.

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து, கதை நாயகர்களாக ரசிகர்களை தனித்தனியாக குஷிபடுத்தி வரும் நாயகர்கள் நட்டி, விதார்த். இவர்கள் இருவரும் இணைந்து இந்த ‘சொடக்கு’ படத்தில் நடிப்பதால், ரசிகர்கள் எதிப்பார்ப்பை கூட்டியுள்ளது.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து பிற வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

Our Score