full screen background image

விஜய் தேவரகொண்டா-பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஜே.ஜி.எம்.’ திரைப்படம் துவங்கியது

விஜய் தேவரகொண்டா-பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஜே.ஜி.எம்.’ திரைப்படம் துவங்கியது

இயக்குநர் பூரி ஜெகன்நாத் அவருடைய சொந்த பட நிறுவனமான பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘ஜே.ஜி.எம்.’ தயாரிப்பில் சார்மி கவுர், வம்சி பைடிபள்ளி ஆகியோரும் இணைந்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் முதன் முறையாக நடிகை பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கிறார்.  

பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்திய அளவிலான பொழுது போக்கு திரைப்படமாக உருவாகும் இந்த ‘ஜே.ஜி.எம்.’ படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்.

கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம் – பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர்கள் –  சார்மி கவுர் மற்றும் வம்சி பைடிபள்ளி, தயாரிப்பு நிறுவனம் – பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ், பத்திரிகை தொடர்பு – யுவராஜ்.

இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஆக்சன் டிராமா ஜானரில் தயாராகிறது.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு திட்டமிட்ட அட்டவணையுடன் தொடங்குகிறது. இதில் நடிகை பூஜா ஹெக்டே அதிரடி சண்டைக் காட்சிகளுடன் கூடிய அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘ஜே.ஜி.எம்.’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி பல சர்வதேச நாடுகளில் தொடர்கிறது. இதற்காக தயாரிப்பாளர்கள் பிரத்யேக காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளனர்.

இயக்குநர் பூரி ஜெகன்நாத் , நடிகர் விஜய் தேவரகொண்டாவை இதுவரை திரையில் கண்டிராத புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார். அதே தருணத்தில் விஜய் தேவரகொண்டா தன்னுடைய திரையுலக பயணத்தில் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு ‘ஜே.ஜி.எம்.’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இத்திரைப்படம், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Our Score