full screen background image

“என் மனசுக்கு பிடித்ததுபோல் நேர்மையா நடிச்சேன்..” – ‘நெஞ்சுக்கு நீதி’ நன்றி விழாவில் உதயநிதி ஸ்டாலின்

“என் மனசுக்கு பிடித்ததுபோல் நேர்மையா நடிச்சேன்..” – ‘நெஞ்சுக்கு நீதி’ நன்றி விழாவில் உதயநிதி ஸ்டாலின்

தயாரிப்பாளர் போனி கபூர்  வழங்க, ZEE STUDIOS & BAYVIEW PROJECTS  உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க,  அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் நெஞ்சுக்கு நீதி’.

சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக இப்படம் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்த நிலையில் படக் குழுவினர் நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வினில் கலை இயக்குர் மெவின் பேசும்போது, “ஆர்டிக்கள்-15 நிறைய விருதுகளை வாங்கிய படம். அதன் சாராம்சம் குறையாமல் அருண் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். இந்தப் படம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்திற்கு கடின உழைப்பை கொடுத்துள்ளோம். உதய் சார் அடுத்தடுத்து நிறைய படங்கள் பண்ண வேண்டும். அருண்ராஜா உடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான விஷயம். படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

நடிகர் மயில்சாமி பேசும்போது  “இந்த நன்றி விழாவில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. உதயநிதி சாருடன் இது எனக்கு ஐந்தாவது படம். இந்தப் படத்தில் நான் நடிப்பதற்கு காரணம் உதயநிதி சார்தான். எனக்கு கார், ஜீப் ஓட்ட தெரியாது, ஆனால், எனக்கு இந்தப் படத்தில் டிரைவர் கதாப்பாத்திரம்.

என் கதாபாத்திரத்தை முதலில் செய்ய இருந்தவர் பொன்வண்ணன்தான். சில காரணங்களால் அவர் செய்ய முடியவில்லை. “படத்தில் காமெடி மயில்சாமி தெரியவே கூடாது…” என்று இயக்குநர் முன்பேயே கூறிவிட்டார். படத்தில் நான் பேசிய வசனங்களுக்கு மக்கள் பாராட்டுக்களைத் தந்துள்ளனர். இதற்கு முக்கியக் காரணம் வசனகர்த்தா தமிழ்தான். தமிழ் ஸார் தமிழ் வசனங்களை மிகுந்த சிரத்தை எடுத்து எழுதியிருக்கிறார். படத்தின் வசனங்களை பேசும்போது நான் மிகுந்த சந்தோசத்தில் இருந்தேன். இந்த படம் எனக்கு நல்ல பெயரைப் பெற்று தந்துள்ளது. இந்தப் படத்தின் ஒட்டு மொத்த படக் குழுவிற்கும் என மனமார்ந்த் நன்றி…” என்றார்.

எழுத்தாளர் தமிழ் பேசும்போது, “இந்தப் படத்தை நாங்கள் நினைத்ததைவிட மக்களிடம் நீங்கள் கொண்டுபோய் சேர்ததுள்ளீர்கள். எங்களுக்கு இந்தப் படம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நீங்கள் அதை செய்திருக்கிறீர்கள். எல்லா மக்களுக்குமான படமாக இந்த படம் மாறியுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி. மயில்சாமி சார் படத்தின் உள்ளே வந்த பிறகு, அந்த கதாபாத்திரம் முக்கியமானதாக மாறியது. இந்த படத்தின் கடைசி நிகழ்வு இது. ஆனாலும் இது நிறைவான ஒன்றாய் இருக்கிறது. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

படத் தொகுப்பாளர் ரூபன் பேசும்போது, “இந்தப் படத்தில் சமூக அக்கறை உள்ள அருண்ராஜா அவர்களை தேர்ந்தெடுத்ததற்கு உதய் சாருக்கு நன்றி. கலை மற்றும் சினிமா மேல் மிகுந்த ஆர்வம் உள்ள நபர். இந்த படம் ஒரிஜினல் படமாக இல்லாமல், தமிழுக்கு ஏற்றார் போல் உருவாக்கியுள்ளார் இயக்குநர். படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர். படத்தின் வெற்றிக்கு அனைவரும் காரணம். எல்லோருக்கும் நன்றி.

நடிகர் இளவரசு பேசும்போது, “படத்தின் பெரிய பலத்தில் ஒரு பலம் கலை இயக்குநர். இந்த படத்தில் சுரேஷ் ஒரு காட்சியில் எல்லோரையும் தாண்டி நடித்தார். என் கதாபாத்திரத்தை அருண்ராஜா வடிவமைத்தவிதம், எனக்கு மன அழுத்தத்தை கொடுத்ததது. அந்த அளவு அந்த கதாபாத்திரம் அவ்வளவு சிக்கலை சந்திக்கும் என்பதை வெளிகாட்டி இருந்தது. அருண்ராஜா நினைத்ததை என்னால் முழுதாய் கொடுக்க முடியவில்லை என்று நினைக்கிறேன். படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். தம்பி உதயநிதி இந்த படத்தில் கொடுத்த நடிப்பிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.

நடிகர் ஆரி பேசும்போது, “இந்தப் படம் தற்போதைய சமுகத்திற்கு  தேவையான ஒன்றாக இருந்தது எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த படம் எதிர்காலத்தில் சமூக நீதிக்கான ஒன்றாய் இருக்கும். இந்த படத்தின் உருவாக்கத்திற்கு முழு காரணம் இயக்குநர் குழுதான். என் பாத்திரம் இப்படி வரவேற்பு பெற காரணம் இயக்குநர், உதய் சார் மற்றும் படத் தொகுப்பாளர் ஆகிய மூவர்தான் காரணம். அவர்களுக்கு நன்றி…” என்றார்.

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பேசும்போது, “ஒரு நாள் திரைப்பட பாடலாசிரியராக இதே மேடையில்தான் நான் அறிமுகமானேன். எல்லோருக்கும் இந்த மேடையில் நன்றி கூறிக் கொள்கிறேன்.

இந்தப் படத்தை இயக்க நான் சரியான ஆள் என என்னை தேர்ந்தெடுத்த உதய் சாருக்கு நன்றி. உதய் சார் எனக்கு இந்த படத்தில் முழு சுதந்திரம் கொடுத்தார். “கனா’ படத்தில் நான் புதுமுகங்களை பயன்படுத்தியதுபோல், இந்த படத்திலும் இருக்க வேண்டும்” என்று உதய் சார் கூறினார்.

இந்தப் படத்தில் வசனகர்த்தா தமிழ் பெரும் உழைப்பை கொடுத்துள்ளார். யுகபாரதி அவர்களுக்கு நன்றி, அவர் பல விஷயங்களை கற்றுக் கொடுத்தார். அந்த வட்டார மொழியைப் பேசுவதற்கு எனக்கு பலர் உதவி செய்தனர். அவர்களுக்கும் எனது நன்றி.

இந்தப் படம் சமூக நீதி பேசும் படம். அதற்காகத்தான் நாங்கள் அனைவரும் உழைத்துள்ளோம். நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பு இந்த படத்திற்கு பொருத்தமான ஒன்று. அதை வாங்கிக் கொடுத்த உதய் சாருக்கு நன்றி. உதவி இயக்குநர்கள் மிகப் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர்.

படத்தின் வெற்றிக்கு ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உடைய பங்களிப்பு முக்கியமானது. இந்த படத்திற்கு பத்திரிக்கையாளர்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. என்னுடைய மனைவிக்கு நன்றி. இந்தப் படத்தை செய்ய அவர்தான் தூண்டுகோலாக இருந்தார்..” என்றார்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “என் மனதுக்கு நேர்மையான படத்தை கொடுத்துள்ளேன். அதற்கு நீங்கள் கொடுத்த பாராட்டிற்கு நன்றி. தயாரிப்பாளர்கள் இருவருக்கும் நன்றி.

எனக்கு எந்தவிதமான கஷ்டமும் கொடுக்காமல் படம் பிடித்த ஒளிப்பதிவாளருக்கு நன்றி. படத்தில் என்னுடன் நடித்த ரமேஷ் திலக்கிற்கு நன்றி. ரமேஷ் திலக் மனைவிதான் அவர் உடன் நடிக்கிறார் என்பது தெரியாமல் அவரை சந்தேகப்பட்டேன். கலை இயக்குநரின் பணி எல்லாராலும் பாராட்டப்பட்டது. சுரேஷின் கதாபாத்திரம்தான் இந்தப் படத்தின் உயிர்.  தமிழரசு இந்த படத்தில் பெரிய உழைப்பை கொடுத்துள்ளார். அவருக்கும் நன்றி.

எடிட்டரின் உழைப்புக்கு நன்றி. நடிகை யாமினிக்கு நன்றி. நடிகர் இளவரசு உடன் நடித்தது மகிழ்ச்சி. படம் பார்த்த பிறகுதான் படத்தில் ஆரிதான் ஹீரோ என்று தெரிந்தது. தன்யா அவர்களுக்கு நன்றி. படத்தின் இயக்குநர் படத்தை தமிழுக்கு தகுந்தாற்போல் மாற்றியுள்ளார். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவர்தான். ஜெயித்து காட்டிவிட்டார் அருண். படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படத்தின் வெற்றி அருண் மற்றும் அவரது மனைவிக்கு சமர்ப்பணம்…” என்றார்.

Our Score