full screen background image

2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான உண்மைத் தமிழன் விருதுகள்..!

2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான உண்மைத் தமிழன் விருதுகள்..!

வருடா வருடம் போலவே இந்தாண்டும் தமிழ்த் திரையுலகின் சிறந்த சாதனையாளர்களை பட்டியலிடுவது மிகச் சிரமமாகத்தான் இருந்தது. சென்றாண்டு வெளியான 209 நேரடி தமிழ்த் திரைப்படங்களில் நாம் பார்த்த சுமார் 190 படங்களிலிருந்து சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி அத்தனை சுலபமாக இல்லை.

பல புதுமுக இயக்குநர்கள் தங்களது சிறப்பான இயக்கத் திறமையை வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

பல புதிய சின்ன பட்ஜெட் மற்றும் மீடியம் பட்ஜெட் திரைப்படங்கள் அனைத்து விருதுகளும் தங்களுக்கே கொடுத்தாக வேண்டும் என்று மிரட்டுவதை போல வெளிவந்திருக்கின்றன.

திரையுலகில் அனுபவம் வாய்ந்த பல கலைஞர்களும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.

இத்தனை சிரமத்தில் சிறந்த கலைஞர்களையும், திரைப்படங்களையும் தேர்வு செய்வது மிகக் கடினமாக இருந்தது. பல்வேறு விஷயங்களையும் சீர்தூக்கிப் பார்த்து, நடுநிலைமை தவறாமல், யார், எவர் என்றெல்லாம் யோசிக்காமல் 2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களையும், கலைஞர்களும் தேர்வு செய்திருக்கிறோம்..!

இதில் விடுபட்டுப் போன நல்ல, திறமையான கலைஞர்களும், படங்களும் இருக்கத்தான் செய்கின்றன. மயிரிழையில் மில்லி செகண்ட் இடைவெளியில் அவைகள் விடுபட்டிருக்கின்றன. அந்தப் படைப்பாளிகளும், கலைஞர்களும் அடுத்தடுத்து இதைவிடவும் மிகச் சிறந்த படைப்புகளை படைத்து தங்களை நிரூபிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்..!

வெற்றி பெற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும் நமது இணையத்தளத்தின் வாசகர்கள் சார்பாகவும், தமிழ்ச் சினிமாவின் தீவிர ரசிகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..! 

2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான உண்மைத் தமிழன் விருதுகள்..!

  1. சிறந்த திரைப்படம் – முதல் பரிசு – அசுரன்
  2. சிறந்த திரைப்படம் – இரண்டாம் பரிசு – பேரன்பு
  3. சிறந்த திரைப்படம் – மூன்றாம் பரிசு – தொரட்டி
  4. சிறந்த நகைச்சுவை திரைப்படம் – ஏ-1
  5. சிறந்த பேய் படம் – தில்லுக்கு துட்டு-2
  6. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – கோமாளி
  7. சிறந்த இயக்குநர் – வெற்றி மாறன் (அசுரன்)
  8. சிறந்த இயக்குநர் – சிறப்பு விருது – ராம் (பேரன்பு)
  9. சிறந்த புதுமுக இயக்குநர் –  பி.மாரிமுத்து (தொரட்டி)
  10. சிறந்த புதுமுக இயக்குநர் – சிறப்பு விருது – செழியன் (டூ லெட்)
  11. சிறந்த கதை – பூமணி (அசுரன்)
  12. சிறந்த கதை – சிறப்பு விருது – பி.மாரிமுத்து (தொரட்டி)
  13. சிறந்த திரைக்கதை – மகிழ் திருமேனி (தடம்)
  14. சிறந்த திரைக்கதை – சிறப்பு விருது – ராஜன் மாதவ் (சித்திரம் பேசுதடி-2)
  15. சிறந்த வசனம் – சாந்தகுமார் (மகாமுனி)
  16. சிறந்த வசனம் – சிறப்பு விருது – கே.ஆர்.பிரபு (எல்.கே.ஜி.)
  17. சிறந்த நடிகர் –  தனுஷ் (அசுரன்)
  18. சிறந்த நடிகர் – சிறப்பு விருது – தினேஷ் (இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு)  
  19. சிறந்த புதுமுக நடிகர் – அரிசங்கர் (தோழர் வெங்கடேசன்)
  20. சிறந்த புதுமுக நடிகர் – சிறப்பு விருது – ஷமன் மித்ரு (தொரட்டி)
  21. சிறந்த புதுமுக நடிகை – அஞ்சலி நாயர் (நெடுநல்வாடை)
  22. சிறந்த புதுமுக நடிகை – சிறப்பு விருது – சத்யகலா (தொரட்டி)
  23. சிறந்த நடிகை – ஸ்ரீபிரியங்கா (மிக மிக அவசரம்)
  24. சிறந்த நடிகை – சிறப்பு விருது – இந்துஜா (மகாமுனி)
  25. சிறந்த துணை நடிகர் – ‘ஆடுகளம்’ கிஷோர் (ஹவுஸ் ஓனர்)       
  26. சிறந்த துணை நடிகர் – சிறப்பு விருது – ‘பூ’ ராமு (நெடுநல்வாடை)
  27. சிறந்த துணை நடிகை – ஸ்ரீரஞ்சனி (ஹவுஸ் ஓனர்)
  28. சிறந்த துணை நடிகை – ரெபா மோனிகா ஜான் (பிகில்)
  29. சிறந்த குணச்சித்திர‌ நடிகர் – நெடுமுடி வேணு (சர்வம் தாள மயம்)
  30. சிறந்த குணச்சித்திர நடிகர் சிறப்பு விருது – மிஷ்கின் (சூப்பர் டீலக்ஸ்)
  31. சிறந்த குணச்சித்திர‌ நடிகை – ராதிகா ஆப்தே (சித்திரம் பேசுதடி-2)
  32. சிறந்த குணச்சித்திர நடிகை சிறப்பு விருது – வாசவி (சாம்பியன்)
  33. சிறந்த வில்லன் நடிகர் – யோக் ஜேபி (பொது நலன் கருதி)
  34. சிறந்த வில்லன் நடிகர் சிறப்பு விருது – பக்ஸ் (சூப்பர் டீலக்ஸ்)
  35. சிறந்த வில்லி – மதுபாலா (அக்னி தேவி)
  36. சிறந்த வில்லி – சிறப்பு விருது – சாய் தன்ஷிகா (இருட்டு)
  37. சிறந்த நகைச்சுவை நடிகர் – முனிஸ்காந்த் (இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு)
  38. சிறந்த நகைச்சுவை நடிகர் சிறப்பு விருது – சேஷூ (ஏ-1)
  39. சிறந்த நகைச்சுவை நடிகை – ஊர்வசி (தில்லுக்கு துட்டு-2)
  40. சிறந்த நகைச்சுவை நடிகை சிறப்பு விருது – கோவை சரளா (தேவி-2, காஞ்சனா-3)
  41. சிறந்த குழந்தை நட்சத்திரம் – சாதனா (பேரன்பு)
  42. சிறந்த குழந்தை நட்சத்திரம் – சிறப்பு விருது – நாக விஷால் (கேடி)
  43. சிறந்த ஒளிப்பதிவு – அருள் பத்மநாபன் (மகாமுனி)
  44. சிறந்த படத் தொகுப்பு – கே.ஜே.வெங்கட்ராமன் (சித்திரம் பேசுதடி-2)
  45. சிறந்த ஒலிப்பதிவு – ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு-சைஸ்-7)
  46. சிறந்த ஒலிக் கலவை – தபஸ் நாயக் (ஹவுஸ் ஓனர்)
  47. சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் – Hari / Southern VFX (காஞ்சனா-3)
  48. சிறந்த நடன இயக்கம் – பாபா பாஸ்கர் (மதுரை பளபளக்குது – தேவராட்டம்)
  49. சிறந்த சண்டை இயக்கம் – அன்பறிவ் (கைதி)
  50. சிறந்த கலை இயக்கம் – விஜய் ஆதிநாதன் (சூப்பர் டீலக்ஸ்)
  51. சிறந்த ஆடை வடிவமைப்பு – நீரா கோனா (தேவ்)
  52. சிறந்த ஒப்பனையாளர் – ரோனக்ஸ் சேவியர், சீரலான் மணி, எஸ்.கல்பனா (சூப்பர் டீலக்ஸ்)
  53. சிறந்த பின்னணி இசை – அருண்ராஜ் (தடம்)
  54. சிறந்த பாடல் இசையமைப்பாளர் – மணி அமுதவன் (களவாணி-2)
  55. சிறந்த பாடலாசிரியர் –  டி.கோட்டை சாமி, விவேகா (வோட்டு கேட்டு வந்தாங்களே சின்னாத்தா – களவாணி-2)
  56. சிறந்த டூயட் பாடல் – ஒட்டாரம் பண்ணாத (களவாணி-2)
  57. சிறந்த ஜனரஞ்சகப் பாடல் – மதுரை பளபளக்குது (தேவராட்டம்)
  58. சிறந்த சோகப் பாடல் – கருவறையில் (ஏழில்வேந்தன், மகாலிங்கம் – கபிலவஸ்து)
  59. சிறந்த பின்னணி பாடகர் – மணி அமுதவன் (ஒட்டாரம் பண்ணாத – களவாணி-2)
  60. சிறந்த பின்னணி பாடகி – மாரியம்மாள் (வோட்டு கேட்டு வந்தாங்களே சின்னாத்தா – களவாணி-2)
  61. சிறந்த டிரெய்லர் – தடம்

தேர்வுகள் பற்றிய கருத்துகள், விமர்சனங்கள், அர்ச்சனைகள், பொங்கல்கள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன..!

 

Our Score