full screen background image

2024-ம் ஆண்டின் உண்மைத் தமிழன் திரைப்பட விருதுகள்…! 

2024-ம் ஆண்டின் உண்மைத் தமிழன் திரைப்பட விருதுகள்…! 

2024-ம் ஆண்டு வெளியான 241 தமிழ்த் திரைப்படங்களில் 6 திரைப்படங்கள் ஓடிடி தளங்களிலும், மீதமுள்ள 235 திரைப்படங்கள் திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளன.

நாம் இதுவரையிலும் கடந்த 11 வருடங்களாக வெளியிட்டிருக்கும் உண்மைத்தமிழன் விருதுகளில் தியேட்டர்களில் வெளியான படங்களை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளோம்.

இந்த வருடமும் அதேபோல் ஓடிடி, மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடியாக வெளியான படங்களைக் கணக்கில் எடுக்காமல் தியேட்டர்களில் மட்டும் வெளியான  படங்களில் நாம் பார்த்தவரையிலும் சிறந்த படைப்பாளிகளை, நடிகர், நடிகைகளை. தொழில் நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்துள்ளோம்.

எப்போதும்போல இந்தாண்டும் சிறந்த கலைஞர்களையும், திரைப்படங்களையும் தேர்வு செய்வது மிகக் கடினமாக இருந்தது. பல்வேறு விஷயங்களையும் சீர்தூக்கிப் பார்த்து, நடுநிலைமை தவறாமல், யார், எவர் என்றெல்லாம் யோசிக்காமல்தான் 2024-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படங்களையும், கலைஞர்களும் தேர்வு செய்திருக்கிறோம்..!

இதில் விடுபட்டுப் போன நல்ல, திறமையான கலைஞர்களும், படங்களும் இருக்கத்தான் செய்கின்றன. மயிரிழையில் மில்லி செகண்ட் இடைவெளியில் அவைகள் விடுபட்டிருக்கின்றன. அந்தப் படைப்பாளிகளும், கலைஞர்களும் அடுத்தடுத்து இதைவிடவும் மிகச் சிறந்த படைப்புகளை படைத்து தங்களை நிரூபிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்..!

வெற்றி பெற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும் நமது இணையத்தளத்தின் வாசகர்கள் சார்பாகவும், தமிழ்ச் சினிமாவின் தீவிர ரசிகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..! 

2024-ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களுக்கான உண்மைத்தமிழன் விருதுகள்..!

  1. சிறந்த திரைப்படம்முதல் பரிசுஜமா
  2. சிறந்த திரைப்படம்இரண்டாம் பரிசுநந்தன்
  3. சிறந்த திரைப்படம்மூன்றாம் பரிசு – வாழை
  4. சிறந்த நகைச்சுவை திரைப்படம்இங்க நான்தான் கிங்கு
  5. சிறந்த பேய் படம் – டிமாண்ட்டி காலனி-2
  6. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்லப்பர் பந்து
  7. சிறந்த இயக்குநர்நித்திலன் சாமிநாதன் (மகாராஜா)
  8. சிறந்த இயக்குநர்– சிறப்பு விருது இரா.சரவணன் (நந்தன்)
  9. சிறந்த புதுமுக இயக்குநர் – பாரி இளவழகன் (ஜமா)
  10. சிறந்த புதுமுக இயக்குநர்சிறப்பு விருது தமிழரசன் பச்சமுத்து – (லப்பர் பந்து)
  11. சிறந்த கதைபாரி இளவழகன் (ஜமா)
  12. சிறந்த கதைசிறப்பு விருதுஇரா.சரவணன் (நந்தன்)
  13. சிறந்த திரைக்கதைநித்திலன் சாமிநாதன் (மகாராஜா)
  14. சிறந்த திரைக்கதைசிறப்பு விருது மாரி செல்வராஜ் (வாழை)
  15. சிறந்த வசனம்ரா.சரவணன் (நந்தன்)
  16. சிறந்த வசனம்சிறப்பு விருதுஎஸ்.பி.சுப்புராமன் (அஞ்சாமை)
  17. சிறந்த நடிகர் – விக்ரம் (தங்கலான்
  18. சிறந்த நடிகர்– சிறப்பு விருது சசிகுமார் (நந்தன்)
  19. சிறந்த புதுமுக நடிகர்பாரி இளவழகன் (ஜமா)
  20. சிறந்த புதுமுக நடிகர்சிறப்பு விருது சையத் மஜீத் (பைரி)
  21. சிறந்த புதுமுக நடிகைசம்யுக்தா விஜயன் (நீல நிறச் சூரியன்)
  22. சிறந்த புதுமுக நடிகைசிறப்பு விருது ன்னா பென் (கொட்டுக்காளி)
  23. சிறந்த நடிகைசாய் பல்லவி (அமரன்)
  24. சிறந்த நடிகைசிறப்பு விருது பார்வதி திருவோத்து (தங்கலான்)
  25. சிறந்த துணை நடிகர்சார்லி (பைண்டர், லைன்மேன்)
  26. சிறந்த துணை நடிகர்கருணாஸ் (போகுமிடம் வெகு தூரமில்லை)
  27. சிறந்த துணை நடிகைவிஜி சேகர் (பைரி)
  28. சிறந்த துணை நடிகைசிறப்பு விருதுசுவாசிகா (லப்பர் பந்து)
  29. சிறந்த குணச்சித்திரநடிகர்தம்பி ராமையா (ராஜாகிளி)
  30. சிறந்த குணச்சித்திர நடிகர் சிறப்பு விருது – எம்.எஸ்.பாஸ்கர் (ஒரு நொடி, ரகு தாத்தா)
  31. சிறந்த குணச்சித்திரநடிகைஈஸ்வரி ராவ் (ஆலகாலம்)
  32. சிறந்த குணச்சித்திர நடிகை சிறப்பு விருதுஸ்ரீரஞ்சனி (ஒரு நொடி)
  33. சிறந்த வில்லன் நடிகர்அனுராக் காஷ்யப் (மகாராஜா)
  34. சிறந்த வில்லன் நடிகர் சிறப்பு விருதுவின்சென்ட் நகுல் (இடி மின்னல் காதல்)
  35. சிறந்த வில்லி – ரமா (வெப்பம் குளிர் மழை)
  36. சிறந்த வில்லிசிறப்பு விருதுகாயத்ரி (கலன்)
  37. சிறந்த நகைச்சுவை நடிகர் – சேஷூ (வடக்குப்பட்டி ராமசாமி)
  38. சிறந்த நகைச்சுவை நடிகர் சிறப்பு விருதுஆனந்த்ராஜ் (வித்தைக்காரன்)
  39. சிறந்த நகைச்சுவை நடிகை – ஊர்வசி (ஜெ.பேபி)
  40. சிறந்த நகைச்சுவை நடிகை சிறப்பு விருது – கோவை சரளா – (அரண்மனை-4)
  41. சிறந்த குழந்தை நட்சத்திரம் (ஆண்)பொன்வேல் (வாழை )
  42. சிறந்த குழந்தை நட்சத்திரம் (ஆண்) – சிறப்பு விருதுராகுல் (வாழை)
  43. சிறந்த குழந்தை நட்சத்திரம் (பெண்) – சச்சேனா – (மகாராஜா)
  44. சிறந்த குழந்தை நட்சத்திரம் (பெண்) – சிறப்பு விருதுபிரணதி (புஜ்ஜி அட் அனுப்பட்டி)
  45. சிறந்த ஒளிப்பதிவுசரவணன் இளவரசு (ரசவாதி)
  46. சிறந்த படத் தொகுப்புபிலோமின் ராஜ் (பிளாக்)
  47. சிறந்த ஒலிப்பதிவுSync Cinema (டிமாண்ட்டி காலனி-2)
  48. சிறந்த ஒலிக் கலவைSync Cinema (டிமாண்ட்டி காலனி-2)
  49. சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ்ஹரிஹரசுதன் (கங்குவா)
  50. சிறந்த நடன இயக்கம்தினேஷ் (மனசுலாயோவேட்டையன்)
  51. சிறந்த சண்டை இயக்கம்விக்கி (பைரி)
  52. சிறந்த கலை இயக்கம்ரவி பாண்டி (டிமாண்ட்டி காலனி-2)
  53. சிறந்த ஆடை வடிவமைப்புநவதேவி ராஜ்குமார், மாலினி கார்த்திகேயன் (டிமாண்ட்டி காலனி-2)
  54. சிறந்த ஒப்பனையாளர்பல்தேவ் (தங்கலான்)
  55. சிறந்த பின்னணி இசைசாம் சி.எஸ். (பிளாக்)
  56. சிறந்த பாடல் இசையமைப்பாளர்பொம்மக்கா (விஷால் சந்திரசேகர்திரு.மாணிக்கம்)
  57. சிறந்த பாடலாசிரியர்சொற்கோ (பொம்மக்காதிரு.மாணிக்கம்)
  58. சிறந்த டூயட் பாடல்ஆத்தங்கரை பூந்தோட்டம் (டப்பாங்குத்து)
  59. சிறந்த ஜனரஞ்சகப் பாடல்போலீஸ்காரனைக் கட்டிக்கிட்டா (ஜாலியோ ஜிம்கானா)
  60. சிறந்த சோகப் பாடல்ஆண்டவனே ஆண்டவனே (ராஜாகிளி)
  61. சிறந்த பின்னணி பாடகர்திப்பு – (பொம்மக்காதிரு.மாணிக்கம்)
  62. சிறந்த பின்னணி பாடகி – ஆண்ட்ரியா ஜெர்மியா (போலீஸ்காரனைக் கட்டிக்கிட்டா – ஜாலியோ ஜிம்கானா)
  63. சிறந்த டிரெய்லர்பிளாக்

தேர்வுகள் பற்றிய கருத்துகள், விமர்சனங்கள், அர்ச்சனைகள், பொங்கல்கள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன..!

Our Score