full screen background image

கோவா திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றார் தனுஷ்

கோவா திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றார் தனுஷ்

இந்தியாவின் 52வது சர்வதேச திரைப்பட திருவிழாவின் நிறைவு விழா நேற்று கோவாவில் நடைபெற்றது.

இந்தத் திரைப்பட விழாவில் ஜப்பானிய திரைப்படமான ‘ரிங் வாண்டரிங்’ தங்க மயில் விருதை வென்றது.

ஸ்பெயின் திரைப்படம் ‘தி வெல்த் ஆப் த வோர்ல்ட்’ சிறப்பு விருதை பெற்றது.

சிறந்த இயக்குநருக்கான வெள்ளி மயில் விருதை, ‘சேவிங் ஒன் ஹூ இஸ் டெட்’ படத்தின் இயக்குநர் வேக்லவ் கதர்ன்கா வென்றார்.

இந்திய மற்றும் மராத்தி நடிகர்கள் ஜித்தேந்திர பிகுலால் ஜோஷி, நிஷிகாந்த் காமத் ஆகியோர் சிறந்த நடிகருக்கான வெள்ளி மயில் விருதை வென்றனர்.

ஸ்பெயின் நடிகை ஏஞ்சலா மோலினா சிறந்த நடிகைக்கான வெள்ளி மயில் விருதை வென்றார்.

பிரிக்ஸ் அமைப்பின் சிறந்த நடிகருக்கான விருதை அசுரன்’ படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக நடிகர் தனுஷ். பெற்றார்.

நடுவர்களின் சிறப்பு விருதை ‘கோதாவரி’ படத்தை இயக்கிய மராத்தி இயக்குநர் நிகில் மகாஜன், பிரேசில் நடிகை ரெனாட்டோவுடன் பகிர்ந்து கொண்டார்.

தி டோரம்’ படத்தை இயக்கிய ரஷ்ய இயக்குனர் ரோமன் வாஷ்யனோவ், சிறப்பு விருதை பெற்றார்.

முதல் முறையாக திரையிடப்பட்ட படங்களில் சிறந்த திரைப்படமாக இயக்குநர் மாரி அலெஸ்ஸாண்டிரினியின் ‘ஜகோரி’ தேர்வு செய்யப்பட்டது.

இந்தியாவில் சினிமா படப்படிப்பு நடத்த உகந்த மாநிலமாக உத்தரபிரதேசம் தேர்வு செய்யப்பட்டது.

இதற்கான விருதை உத்தரபிரதேச அரசுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரியான அனுராக் தாகூர் உத்தரபிரதேச கூடுதல் தலைமை செயலாளரிடம் வழங்கினார்.

Our Score