‘வால்டர்’ படத்தில் கௌதம் மேனனுக்கு பதிலாக நட்டி நட்ராஜ் நடிக்கிறார்..!

‘வால்டர்’ படத்தில் கௌதம் மேனனுக்கு பதிலாக நட்டி நட்ராஜ் நடிக்கிறார்..!

இந்திய அளவில் சிறந்த ஒளிப்பதிவாளர்களாக கொண்டாடப்படுபவர்களில் ஒருவராக இருக்கும் ‘நட்டி’ எனும் நட்ராஜ் சுப்பிரமணியம் தனது நடிப்பாலும் புகழை குவித்து வருகிறார். ‘சதுரங்க வேட்டை’ தொடங்கி வித்தியாசமான வேடங்களில் தனது சிறந்த நடிப்பை தந்து வரும் அவர் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் பெரிதும் ஈர்க்கும் நடிப்பை வழங்கியிருந்தார்.

தற்போது சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘வால்டர்’ படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடிக்க வேண்டிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த வால்டர் படத்தை 11:11 Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் தயாரிக்கிறார்.

walter-movie-poster-1

சிபிராஜ் நாயகனாக நடிக்கிறார். ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படப் புகழ் ஷ்ரின் கான்ஞ்வாலா நாயகியாக நடிக்க… நடிகர் சமுத்திரகனியும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார்.

இசை – தர்மா பிரகாஷ், ஒளிப்பதிவு – ராசாமதி, படத் தொகுப்பு – S.இளையராஜா, பாடல்கள் – அறிவுமதி, அருண் பாரதி, உமா தேவி, கலை இயக்கம் – A.R.மோகன், நடன இயக்கம் – தாஸ்தா, சண்டை இயக்கம் – விக்கி, தயாரிப்பு மேற்பார்வை – K.மனோஜ் குமார், புகைப்படம் – தேனி முருகன், டிசைன்ஸ் – J சபீர், எழுத்து, இயக்கம் – யு.அன்பு.

natty natraj-2

படம் குறித்து இயக்குநர் U.அன்பு பேசும்போது, “இந்த ‘வால்டர்’ படத்தின் வெகு முக்கியமான பாத்திரத்திற்கு இயக்குநர் கௌதம் மேனனை அணுகியது அனைவரும் அறிந்ததே. அவரும் இந்த கதாப்பாத்திரத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு,  நடிக்க ஒப்புக் கொண்டார்.

அவரது பிற படங்களை இயக்கும் பணிகளின் காரணத்தால் அவரது கால்ஷீட் எங்கள் படத்திற்கு ஒத்து வராமல் போனது. அதன் பிறகு பல நடிகர்களை இக்கதாப்பாத்திரத்திற்கு பரிசீலித்தோம். இறுதியாக ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திற்கு பிறகு நடிகர் நட்டியை அணுகினோம்.

குவியும் வாய்ப்புகளில் நல்லதை மட்டுமே செய்வேன் எனும் கொள்கையில் அவர் இருந்தார். கதையை முழுதாக கேட்ட பின்பே இப்படத்தில் நடிப்பதை பற்றி பேச முடியும் என்றார். கதை கேட்டதன்  முடிவில் படத்தின் மீதும் அவரது பாத்திரம் மீதும் அவருக்கு பெரும் நம்பிக்கை வந்து உடனடியாக நடிக்க ஒத்துக்கொண்டார்.

அவர் சம்பந்தமான காட்சிகளை 15 நாட்கள் முன்னதாக தொடங்கி கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை ஆகிய இடங்களில் படமாக்கியுள்ளோம்.

natty natraj-3

படத்தில் நட்டியின் கதாப்பாத்திரம் முழுக்க வில்லன் என சொல்ல முடியாது. ஆனாலும், படத்தில் அவர் நேர்மறையானவரா அல்லது எதிரமறையானவரா என இறுதிவரை ரசிகர்கள் குழம்பும்படி, அவரது கதாப்பாத்திரம் இருக்கும். கண்டிப்பாக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெறும் பாத்திரமாக இருக்கும்.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சிபிராஜின் திறமை குறித்து புதுமுகமான நான் கூறி தெரிய வேண்டியதில்லை. மொத்த சினிமா உலகமும் அறியும். அவரது திறமை குறித்து கூற வேண்டுமெனில் வெறும்  முகப்பூச்சு செய்து  கேமாரா முன் நிற்பவரல்ல அவர். அவரது  தொழில் நுட்ப அறிவும், கதாப்பாத்திரத்தை அவர் கையாளும்விதமும், திரைப்படம் பற்றிய அவரது தெளிவும் அளப்பரியது. அவர் இந்த ‘வால்டர்’ படத்தில் காவலன் பாத்திரமாகவே  வாழ்ந்திருக்கிறார்…” என்றார்.

Our Score