விஜய்யின் 64-வது திரைப்படம் ‘மாஸ்டர்’..!

விஜய்யின் 64-வது திரைப்படம் ‘மாஸ்டர்’..!

நடிகர் விஜய்யின் 64-வது திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். ‘மாநகரம்’, ‘கைதி’ ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்திற்கு  ‘மாஸ்டர்’  என்ற தலைப்பு வைத்திருப்பதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மலையாள நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், அழகம் பெருமாள், ரம்யா சுப்ரமணியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

எழுத்து & இயக்கம் - லோகேஷ் கனகராஜ், தயாரிப்பு நிறுவனம் XB பிலிம் கிரியேட்டர்ஸ், தயாரிப்பாளர் – சேவியர் பிரிட்டோ, இசை – அனிரூத், வசனம் - லோகேஷ் கனகராஜ், ரத்ன குமார், பொன் பார்த்திபன், ஒளிப்பதிவு - சத்யன் சூரியன், படத் தொகுப்பு - பிலோமின் ராஜ், லைன் புரொடியூசர்ஸ்-  லலித் - ஜெகதீஷ், நிர்வாக தயாரிப்பு - R.உதயகுமார், சண்டை இயக்கம் - ஸ்டண்ட் சில்வா, விளம்பர வடிவமைப்பு - கோபி பிரசன்னா, ஆடை வடிவமைப்பு - பல்லவி சிங், நடன இயக்கம் - தினேஷ், சதிஷ், மக்கள் தொடர்பு - ரியாஸ் கே.அஹ்மத்.

‘மாஸ்டர்’ படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது. வரும் 2020 ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வரவிருக்கிறது.