full screen background image

விக்ரமின் 60-வது படத்தின் படப்பிடிப்பு முடிந்தது

விக்ரமின் 60-வது படத்தின் படப்பிடிப்பு முடிந்தது

அப்பாவான நடிகர் விக்ரமும், மகன் துருவ் விக்ரமும் முதல்முறையாக ஒரு படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். இந்தப் படத்திற்கு இதுவரையிலும் பெயர் வைக்கப்படாததால் இப்போது ‘சீயான்-60’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தில் சிம்ரன், வாணி போஜன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்துக்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

கடந்த ஒரு மாதமாக முழு வீச்சில் நடைபெற்று வந்த இந்த ‘சீயான் 60’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து படக் குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

இதையடுத்து இப்படத்தின் பின்னணி பணிகளை விரைவில் தொடங்க உள்ளனர். படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரும் விரைவில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து நடிகர் விக்ரம், அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கொல்கத்தா கிளம்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 
Our Score