full screen background image

டோரதி – சினிமா விமர்சனம்

டோரதி – சினிமா விமர்சனம்

இந்த வாரம் வெளிவந்த படங்களில் அதிகம்பேர் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த திரைப்படம். காரணம், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். அதோடு அவருடைய இயக்கத்தில் முதன்முறையாக இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பதால், அதுவும் படத்திற்கு ஒரு மிகப்பெரிய விளம்பரமாக அமைந்துவிட்டது. இதற்காகக் காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்தப் படம் எப்படிப்பட்ட ஒரு உணர்வைக் கொடுத்தது என்பதைப் பார்ப்போம்.

இப்படத்தில் சனந்த், ரிஷிகாந்த், கீர்த்தி சுரேஷ், முத்துக்குமார், சௌந்தரராஜா, ராமச்சந்திரன் துரைராஜ், கஜராஜ், ராம்ஸ், ஜீவா சுப்பிரமணியம் மற்றும் பலரும் நடிச்சிருக்காங்க. ஒளிப்பதிவு திரு, இசை இளையராஜா, காஸ்ட்யூம் டிசைனர் பிரவீன் ராஜா.

இப்படத்தை எழுதி இயக்கியிருப்பது கார்த்திக் சுப்பராஜ். உடன் எழுத்தாளர் சரவணன் சந்திரன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

இப்படமும் வழக்கம்போல மதுரையை மையமாகக் கொண்ட படம்தான். மதுரையின் அருகில் இருக்கும் ஒரு குக்கிராமத்தில் இருந்தவர்களின் வாழ்க்கைதான் இந்த படம். ஆனால், இது இப்போது நடந்தது அல்ல; 1990-களில் நடந்த கதை.

சனந்தும், ரிஷிகாந்தும் பள்ளிப் பருவத்திலிருந்தே ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் (close friends). அப்படியே வளர்ந்துட்டு வர்றாங்க. சனந்த் வந்து கொஞ்சம் அந்த ஊரின் மிகப்பெரிய பெரும்பான்மை உள்ள சமூகத்தைச் சேர்ந்தவன். ரிஷிகாந்த் அப்படி இல்ல; அவரு ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அந்த இரண்டு சமூகங்களுக்கு இடையில் அந்த ஊரிலேயே ஒற்றுமை இல்லை.

இதில் சனந்தின் அப்பாவான முத்துக்குமார் ஊரில் வட்டித் தொழில் செய்து வருகிறார். ஊரில் பல பேரின் சொத்துக்களை அடமானம் வைத்து அவரிடமிருந்த பணத்தைக் கடனாக வாங்கியிருக்கிறார்கள். ரொம்பவும் சாதி வெறி பிடித்தவர். அவருடைய மகன்களான சௌந்தரராஜாவும், ராமச்சந்திரனும் இருவருமே அப்பா சொல் பேச்சைக் கேட்டு அப்படியே நடப்பவர்கள். அடிதடி, வெட்டுக் குத்துக்கு அஞ்சாதவர்கள். ஆனா சாதி வெறி அப்படியே இருக்கிறது. இதில் ராமச்சந்திரன் தன்னுடைய மனைவியையே பிரிந்துவிட்டு, பிள்ளைகளையும் பிரிந்துவிட்டு அப்பா கூடவே இருக்கிறார்.

இதில் கடைசிப் பிள்ளையான சனந்தும், ரிஷிகாந்தும் மிக நெருங்கிய நண்பர்களாக இருப்பது முத்துக்குமாருக்கு பிடிக்கல. அவன் அடிக்கடி வீட்டுக்கு வரும் பொழுது அவனை அவமானப்படுத்திக்கிட்டே இருக்காரு.

இந்த நேரத்தில் சௌந்தரராஜா வெளியூருக்குச் சென்றவர், திரும்பி வரும்பொழுது கீர்த்தி சுரேஷை திருமணம் செய்து கொண்டு வந்துவிட்டார். “இந்தப் பொண்ணு பார்க்கப் பாவமா இருக்கு, ஒரு பிரச்னையில் சிக்கியிருந்துச்சு, நான்தான் காப்பாத்துனேன், போறதுக்கு வழியில்லை, அதனால கூட்டிக்கிட்டு வந்துட்டேன்” அப்படின்னு சொல்றாரு.

அந்தப் பெண் வந்தது, கீர்த்தி சுரேஷ் வந்ததிலிருந்து முத்துக்குமாருக்கு அவரைப் பிடிக்கல. ஏன்னா முத்துக்குமாருக்கு ஆரம்பத்திலிருந்தே பெண் வாடை பிடிக்காது. பெண்கள் வந்தால் வீட்டிலே ஏதாவது பிரச்சனை வரும் அப்படின்ற ஒரு மாதிரியான மனநிலை கொண்டவர். இதனாலேயே அவருடைய மனைவியும், மகளும் மர்மமான முறையில் அந்த வீட்டில் ஏற்கனவே இறந்திருக்காங்க.

இப்போ கீர்த்தி சுரேஷ் வந்தவுடனே சனந்தின் நடவடிக்கையில் பெரிய மாற்றம். சனந்துக்கு அந்த வீட்டில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக ஒரு பெண்ணிடமிருந்து கிடைக்க வேண்டிய அன்பு, பாசமும் கிடைக்கல. இப்போ புதுசா கீர்த்தி சுரேஷ் வந்திருக்காங்களே என்று அவங்களோட பேசப் பேச, கீர்த்தியின் அன்பு, பாசம், அவர்கள் பேசுகின்ற விதம் அவருக்குப் பிடித்துப் போக, கீர்த்தி கூடவே சுத்திக்கிட்டு இருக்காரு சனந்த். இது முத்துக்குமாருக்குப் பிடிக்கல.

ஒரு நாள் சனந்த் வெளியில் போயிட்டு திரும்பும்போது கீர்த்தி சுரேஷ் தற்கொலை பண்ணிக்கிறாங்க. அவங்க தற்கொலை பண்ணிக்கொண்டிருக்காங்க அப்படிங்கறது போலீஸும் வச்சு முத்துக்குமார் சொன்னாலும், நிச்சயமாக அவங்க கொலை செய்யப்பட்டிருக்காங்க அப்படிங்கறது அவங்க உடலில் இருந்த காயங்களை வச்சு சனந்துக்கு தெரியுது. முத்துக்குமார்தான் அடித்துக் கொலை பண்ணியிருக்காரு அப்படின்னு தெரியுது. ஆனா அவரால எதுவும் சொல்ல முடியல.

இந்தச் சூழ்நிலையில், வேறொரு கொலை சம்பவத்தில் ரிஷிகாந்த் சம்பந்தப்படுறாரு. அதனால அவரை காப்பாத்துறதுக்காக அவரை வெளி மாநிலத்துக்கு லாரி ஏத்திட்டு போகச் சொல்லி முத்துக்குமாரும் மகன்களும் அனுப்பிடுறாங்க. இந்த நேரத்தில் கீர்த்தி சுரேஷும் இல்ல, ஃப்ரெண்டும் உள்ளே இல்ல. திடீரென்று ஒரு முடிவு எடுக்கிறார் சனந்த்.

அந்த முடிவை எடுத்த பொழுது முத்துக்குமாருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் சுத்தமா பிடிக்கல. இப்போ “இவன் மகனா இருந்தாலும் பரவாயில்லை, செத்தாலும் பரவாயில்லை; இவன் வெளியில போய் இதை சொன்னா நம்முடைய குடும்பத்துக்குப் பெரிய அவமானம்” என்று நினைக்கிறவங்க இவனை கொலை பண்ணனும் அப்படின்னு சொல்லி, ரிஷிகாந்தைக் கூப்பிட்டு அவர்கிட்ட சனந்தை கொலை செய்வதற்கு அசைன்மென்ட் (assignment) கொடுக்குறாங்க.

இப்போ சனந்த் தன்னுடைய உயிர் நண்பனை கொலை செய்யணுமா, ஏன், எப்படி என்று யோசிக்கிறார். ஆனால், சனந்தை நேரா பார்த்த பின்னாடிதான் அவருக்கே தெரியுது, எதுக்காக இந்த குடும்பம், எதுக்காக அப்பாவும் உடன்பிறந்த அண்ணன்களும் இவனை கொலை பண்ண துடிச்சாங்கன்னு. இதுக்குப் பின்பு ரிஷிகாந்த் என்ன முடிவு எடுக்கிறார் அப்படிங்கிறதுதான் இந்த படத்துடைய கதை.

ஹீரோ ஆயிட்டாரு சனந்த். ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் ஒரு உண்மையான ஹீரோவா நடிச்சிருக்காரு. ஆனா உண்மையா இந்தப் படத்தின் கேரக்டரில் நடிச்சதுக்கு ரொம்ப ரொம்ப பாராட்டுக்கள். ரொம்ப தைரியமா நடிச்சிருக்காரு. நிச்சயமா யாருமே நடிக்க முன்வந்திருக்க மாட்டாங்க, நிச்சயமா யோசிச்சிருப்பாங்க. ஆனால் ஒரு நாலஞ்சு வருஷமா இந்தக் கதையைக் கேட்டு, கதையை உள்வாங்கி அதுல இந்த மாதிரி நடிக்கணும்ன்றதுக்காக வெயிட் பண்ணி, ரொம்பவும் காத்திருந்து இந்தப் படத்தில் நடிச்சிருக்கார் சனந்த். அதுக்காக அவருக்கு ஒரு பாராட்டுக்கள். ரொம்ப அழகா நடிச்சிருக்காரு. ரொம்ப சிறப்பான இயக்கம் கார்த்திக் சுப்பராஜோட இயக்கத்தைப் பத்தி நமக்குத் தெரியும். சிறப்பான இயக்கத்தினால் சிறப்பா நடிக்க வைக்கப்பட்டிருக்காங்க.

அப்புறம் அவரும் கடைசியில அவருடைய தோற்றம் மாறி வேறொரு உலகத்தில் அவர் இருக்கும் பொழுதும் அவருடைய அழகு, அந்த உடையில் அவரைப் பார்க்கும்போதும் சரி, இப்படி ஒரு பிரச்சனையில் இருப்பவர்கள் இப்படித்தான் இருப்பார்களா அப்படின்னு சொல்லி நாம சொல்லலாம். ஆனால் அதுலயும் அவர் ஒரு காதலோடு, கருணையோடு ஒரு ரிஷிகாந்தைப் பார்க்கிற அந்தப் பார்வை இருக்கு பாருங்க, அது வந்து மறக்க முடியாதது. அதே சமயம் நம்மளால ஏத்துக்க முடியலைன்னாலும் சரி, ஆனா வேற வழியில்லை, அதை ஜீரணித்துதான் ஆகணும் அப்படிங்கிற ஒரு நிலைமைக்குக் கொண்டுவந்து விட்டுட்டாங்க.

அப்புறம் அவரு கூட நடிச்ச ரிஷிகாந்த், இன்னொரு ஹீரோவா அவரும் தன்னால் முடிந்த அளவுக்கான ஒரு நடிப்பைக் கொடுத்திருக்காரு. ஏற்கனவே இப்பதான் ‘முதல் ராத்திரி’ படம் வந்து நெட்ஃபிளிக்ஸில் (Netflix) சக்கைப்போடு போட்டுகிட்டு இருக்கு. அவருக்கான ரசிகர்களும் கூடிட்டாங்க. இந்த படத்திலேயும் இதைவிடவும் கூடுதலா ரசிகர்கள் கூடுவாங்க. ஆனா இரண்டு பேத்துக்குமே, சனந்துக்கும் இவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

அடிப்படையில் சனந்த் அடிதடி பயங்கரமா பண்ணுவாரு, இவரு ரிஷிகாந்த் பயப்படுவாரு. அந்த மாதிரி ஒரு கேரக்டர் ஸ்கெட்ச்சோட (character sketch) கடைசி வரைக்கும் இவரைக் கொண்டுபோய், இவர்தான் சனந்தோட காதலன் அப்படின்னு சொல்லி கடைசியா காட்டுறாங்க பாருங்க; நிச்சயமா ஜீரணிக்க முடியல. ஆனா வேற வழியில்ல, அதை நம்பித்தான் ஆகணும் அப்படின்ற மாதிரி கதை, திரைக்கதையை அமைச்சிருக்காரு. அவருடைய நடிப்பு ரிஷிகாந்த் கடைசியில கிளைமாக்ஸில் கொல்லவும் முடியாம, வச்சுக்கவும் முடியாம, பொய்யும் சொல்ல முடியாம, ஏன்னா ஊர்ல அம்மா இருக்காங்க, இவங்க இதைக்காட்டி அவங்க அம்மாவைக் கொன்னுட்டா என்ன பண்றதுன்னு அவர் தவிக்கிற தவிப்பு ரொம்ப அற்புதமான ஒரு நடிப்பைக் காண்பிச்சிருக்காரு.

இடையில ஒரு ஓரிரு காட்சிகள்தான் அப்படினாலும் ஒரு தேவதை மாதிரி வந்து போயிருக்காங்க கீர்த்தி சுரேஷ். அழகு அழகு, அவ்வளவு அழகான… எப்படி எல்லாம், எந்தெந்த பக்கமெல்லாம் காட்டினா கீர்த்தி சுரேஷ் அவ்வளவு அழகா இருப்பாங்களோ அப்படியெல்லாம் காட்டியிருக்காங்க. அதுல அவங்க வந்து பக்கத்துல உட்கார்ந்து சனந்துக்கு கிளாஸ் எடுக்கிற மாதிரி அவங்க பேசுற அன்பான பேச்சு இருக்கு பாருங்க, நிச்சயமா எந்த ஒரு வீட்ல இருந்தாலும், எந்த ஒரு ஆம்பளையா இருந்தாலும் நிச்சயமா கவுந்துருவாங்க. அந்த அளவுக்கு எப்படி பெண்கள் ஆண்களிடம் பேசினால் எப்படிப் பிடிக்குமோ அதே மாதிரி கீர்த்தி சுரேஷைப் பேச வச்சிருக்காரு இயக்குநர்.

அதனால அவர்களுடைய உறவு வந்து நமக்கு தவறா படல. படம் முடிந்து வெளிய வரும்போதுதான் நமக்குத் தோணுது; ஆக மொத்தம் நம்முடைய கண்ணை கட்டிப்போட்டாரு கார்த்திக் சுப்பராஜ்.

அப்புறம் நாலாவதா நடிச்ச முத்துக்குமார், அவங்க அப்பாவா நடிச்சவரு. அவரு அப்படி ஒரு நடிப்பு மனுஷன். எப்பவும் வாயில விசில் ஊதிட்டே வராரு. விசில் ஊதிட்டே வந்து நடிச்சிருக்காரு. அதுலயும் அவருடைய கொஞ்சம் மிடில் ஏஜ் (middle age), அதுக்கடுத்து வயசான தோற்றம், அப்புறம் தாத்தா வயதான தோற்றம் அப்படின்னு அந்தத் தோற்றத்துல எல்லாம் அவருடைய நடிப்பு வில்லத்தனம்…

அபாரமான, மிகச்சிறந்த ஒரு வில்லனா இந்த வருஷம் வந்திருக்காரு முத்துக்குமார். அதுக்கப்புறம் கூட நடிச்ச ராம்ஸ், கஜராஜ், அண்ணனா நடிச்ச சௌந்தரராஜன், அவரும் ஒரு பக்கம் தன்னுடைய நடிப்பில் இன்னொரு பக்கம் ஸ்கோர் பண்ணியிருக்காரு. அவருக்கு அண்ணனா நடிச்சவரு, அப்புறம் இவரு ரிஷிகாந்தோட அம்மாவா நடிச்சவங்க என ஒட்டுமொத்தமா சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்காங்க, அதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

தொழில்நுட்பத்தில் முதலில் இருப்பது இசைஞானி இளையராஜா. அற்புதமான பிஜிஎம் (BGM), பின்னியிருக்காரு. பின்னணி இசைதான் அழகு அழகு, அப்படி ஒரு அழகான பின்னணி இசையைப் போட்டு நமக்கு படம் முழுக்க இசையை நாம கேட்கல, ஆனா படத்தைக் கூர்ந்து கவனிக்க வச்சிருக்காரு. அந்த இசையை எந்த அளவுக்கு மட்டுப்படுத்த முடியுமோ மட்டுப்படுத்தி பண்ணியிருக்காரு.

ஆனா கடைசியில அவருடைய இசையில, சனந்துக்கு நடக்கிற அந்த சடங்கு, அந்த சமயம் ரிஷிகாந்த் போய் நின்னு பார்க்கிறது, காதலோடு பார்க்கிற அந்த சீன்ல (scene) போட்ட மியூசிக், பிஜிஎம் பிரமாதம். அசத்தியிருக்காரு இசைஞானி. அப்புறம் அதுல ரெண்டு பாடல்கள், அது ரொம்ப ஃபேமஸ் ஆயிடுச்சு. கல்யாண வீடு பாட்டு ஏற்கனவே போட்ட மெட்டு என்றாலும் பரவாயில்லை, நல்ல பாடல்களை காதுல கேட்கக்கூடிய பாடல் வரிகளை வச்சு அழகா பண்ணியிருக்காரு.

ஒளிப்பதிவாளர் திரு, பிரமாதமான ஒளிப்பதிவு. சண்டைக் காட்சிகளை எல்லாம் எப்படி இவ்வளவு அழகா, நேர்த்தியா படம்பிடிச்சாங்கன்னு தெரியல. அதோட இறுதிக் காட்சியில் குஜராத்தில் அந்தப் பகுதி முழுவதையுமே ரொம்ப அழகாவும், அட்ராக்ஷனாவும் பதிவு பண்ணியிருக்காங்க.

அப்புறம் படத்தோட ஒளிப்பதிவு தொகுப்பாளர், இந்த படம் முன்பின் காட்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறதுனால நமக்குக் கொஞ்சம் குழப்பம் வந்துவிட்டது. ஆனா அந்தக் குழப்பத்தைக் கிளியர் பண்றதுக்கு இவங்க யூஸ் பண்ணியிருக்கிற மெத்தட் (method) வந்து கலர். கலர்ல ஷேடோ (shadow) வந்து பழைய காலத்துப் படம் மாதிரி வர்றது பழைய கதை, இப்போ அது மாறி வர்றது புதுக்கதை அப்படிங்கிற மாதிரியா மாத்தியிருக்காங்க. அதை இன்னும் கொஞ்சம் மாற்றி சொல்லியிருக்கலாம். இது ஒரு குறை.

இன்னொரு பெரிய குறை அப்படின்னு நினைச்சா, மதுரை வட்டாரத் தமிழ். முன்னாடி முதல் ராத்திரி இப்போ திருநெல்வேலி தமிழ்ல வந்து கொஞ்சம் ரொம்ப பிக்கப் ஆகாம இருந்ததுக்கு காரணம் அந்த மொழிதான். அதே மாதிரிதான் இதுவும். இதுலயும் கொஞ்சம் ஒளிப்பதிவு ரொம்ப ரொம்ப கம்மி—ஒளிப்பதிவுன்னா சவுண்ட் ரெக்கார்டிங் (sound recording) சொல்றேன். அது தமிழ், மதுரைத் தமிழ்ல டயலாக் வேகவேகமா பேசுறதுனால அந்த டயலாக் நிறைய பேருக்குப் புரியல. அதை கார்த்திக் சுப்பராஜ்கிட்ட நாம சொல்ல வேண்டி இருக்கு. அதை அடுத்த படத்திலாவது இது மாதிரியான வசனங்கள் என்றால் கொஞ்சம் முக்கியமான வசனங்களுக்கு டைட் க்ளோசப் ஷாட்ல (tight close-up shot) வச்சு கொஞ்சம் நிறுத்தி, நிதானமா பேசுற மாதிரி வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும். இதுல கிட்டத்தட்ட ஒரு கால்வாசி வசனங்கள் புரியாமல் போனதற்கு சவுண்ட் ரெக்கார்டிங் ரொம்ப கம்மியா இருந்தது. அதுவும் ஒரு காரணம்.

மத்தபடி திருநங்கைகளாக மாறுபவர்கள், அவர்களுடைய வாழ்க்கையைச் சொல்ல வந்தவரு, படத்தோட இடைவேளைக்குப் பின்னாடி, இடைவேளைக்கும் இடைவேளைக்குப் பின்னாடி இருக்கிற பாதி இருக்குல்ல, அதுலயும் பாதிப் படத்துலதான் கதையை ஆரம்பிக்கிறாரு. முன்பாதியிலெல்லாம் ஆரம்பிக்கல. முன்பாதியில அவரு ஆரம்பிச்சிருந்தா கதை வேற மாதிரி போயிருக்கும். ஏன்னா “என்னடா இது திருநங்கை கதையா, இது தப்பாச்சே” அப்படின்னு சொல்லி நாம சொல்லியிருக்கலாம். ஆனால் ரொம்ப விவரமா கார்த்திக் சுப்பராஜ் என்ன பண்ணிட்டாரு, முன்பாதி முழுக்க அந்தக் கதையை சொல்லல. முன்பாதியில் இவங்க ரெண்டு பேத்துக்கும் காதல் இருக்குன்னு அப்படிங்கறத கூட சொல்லல. இவருக்கு, சனந்துக்கு இவர் மேல லவ் இருக்கு அப்படிங்கறத ஒரு ஷாட் கூட சொல்லல. அதே சமயம் திருநங்கையா மாறுவதற்கு ஒரு சான்ஸ் இருக்கு அப்படிங்கறதையும் ஒரு சின்ன ஷாட்ல கூட அவரு உணர்த்தல.

ஆனால் இடைவேளைக்குப் பின்னாடி, அதிலும் பாதிப் படம் நடந்த பின்னாடிதான் டக்குன்னு ஒரு முடிவு எடுத்து, “நான் திருநங்கையா மாறுறேன்”னு சொல்றாரு. அந்த காரணம், கீர்த்தி சுரேஷின் இல்லாமை. கீர்த்தி சுரேஷ் இல்ல, அவங்களை இவங்கதான் கொலை பண்ணிட்டாங்க அப்படின்னு. அப்ப அவரு கொஞ்சம் சொல்லியிருக்கணும். கீர்த்தி சுரேஷ் பெண்ணா இருக்கிறதுனால, அவரும் ஒரு பெண்ணா தன்னை உணர்ந்து பேசியிருக்காரு அப்படிங்கிறதை ஏதாவது ஒரு ஷாட்லயாவது சொல்லியிருக்கணும். அதை கார்த்திக் சுப்பராஜ் தந்திரமா மறைச்சுட்டாரு. ஏன்னா அந்தக் கதையை முழுசா சொல்லிட்டோம்னா, அதுக்கப்புறம் படம் பார்க்கிறவங்களுக்கு அது பிடிக்காம போயிடும். திருநங்கை அப்படினாலே நிறைய பேருக்குப் பிடிக்காமல் இருக்கும்ல, அதனால அதை ரொம்ப ரொம்ப தந்திரமா கார்த்திக் சுப்பராஜ் சொல்லாம விட்டுட்டு கடைசியில வந்து சொல்லிட்டாரு.

இப்ப கடைசியில அவரு வந்து, “நான் ரிஷிகாந்தை லவ் பண்றேன்” அப்படின்ற மாதிரியான அவரு சொல்லும்போது, நாம ஏத்துக்கிறதா வேண்டாமா அப்படின்னு சொல்லி நம்மளே குழப்பத்துல இருக்கிறோம் தியேட்டர்ல. படம் பார்க்கும்போது அப்படி ஒரு குழப்பம். நமக்கு அந்த குழப்பத்தை அப்படியே குழப்பத்துல வச்சுட்டு, சட்டுன்னு ஒரு ராம்ஸ் வந்து ஆலோசனை சொல்றாரு, அறிவுரை சொல்றாரு. “அவன் உன் மேல அவ்வளவு காதல்ல இருக்கான், நீ ஏன் அவனை புரிஞ்சுக்க மாட்டேங்கிற?” அப்படின்னு சொல்றாரு. அது வந்து அவன் திருநங்கையா மாறிட்டான், அதுக்கப்புறம் அவனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும், அவனால குடும்பம் நடத்த முடியுமா, அவனால புள்ள பெத்துக்க முடியுமா—இந்த மாதிரி யோசனைகள் எதுவுமே ரிஷிகாந்துக்கு வரவிடாமல் செய்து, ராம்ஸ் சொன்னவுடனே டக்குன்னு போய் அவரை உடனே கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்குறாங்க, முடிஞ்சு போச்சு படம். இப்படித்தான் படத்தை முடிச்சிருக்காங்க.

ஆக மொத்தம் இது வந்து கார்த்திக் சுப்பராஜ் நம்மளைச் செய்த ஒரு ஏமாற்று வேலை. “என் படம் இப்படித்தான் இருக்கும், இந்த படத்தை இப்படித்தான் சொல்லணும்” ஏன்னா இது சர்ச்சைக்குரிய படம். திருநங்கைகளின் காதல் பத்தி அப்படின்னு நாம பேச ஆரம்பிச்சோம்னா கண்டிப்பா பாதிப் பேருக்கு படம் பிடிக்காது. “நீங்க பிடிக்குதோ பிடிக்கலையோ, இந்த படத்தை கடைசி வரைக்கும் நீங்க பார்த்துதான் ஆகணும்டா” அப்படின்ற மாதிரி நம்ம தலையில மிளகாய் அரைச்சுட்டாரு கார்த்திக் சுப்பராஜ். அந்த வகையில் ஒரு இயக்குநரா தன்னுடைய பணியை கரெக்டா செஞ்சிருக்காரு.

ஆனால் திருநங்கைகளின் இந்தக் காதலை நீங்க ஏத்துக்குறீங்களா, திருநங்கைகளையே நீங்க ஏத்துக்குறீங்களா அப்படிங்கிறது ரெண்டாவது விஷயம். அதை நீங்க ஏத்துக்குறீங்களோ, ஏத்துக்கலையோ அது வேற. ஆனால் ஒரு திரைப்படமாக பார்க்கப்போனால், திருநங்கைகளின் வாழ்க்கையைப் பற்றி சொல்ல வந்தவர், அதை கரெக்டா 25% மட்டும் அதை சொல்லிட்டு, மீதி 75% அவன் எப்படி வாழ்ந்து பிறந்து வந்தான் அப்படிங்கறத மட்டும் சொல்லிட்டு படத்தை முடிச்சுட்டாரு. அந்த வகையில் கார்த்திக் சுப்பராஜின் இந்த படமும் அவருக்குப் பெயர் பெற்றுத் தரும்.

ஃபிலிம் ஃபெஸ்டிவல் அவார்ட் (Film Festival Award) வாங்கி இருக்கு அப்படின்னாங்க, அவார்ட் வாங்காம இருந்தாதான் ஆச்சரியம். அவார்டுக்குரிய படம்தான், அதனால் அவார்ட் வாங்கிருக்கு. அதே சமயம் இந்த திருநங்கை மேட்டர் வந்து நாம ரொம்ப யோசிக்க வேண்டிய ஒரு விஷயம்தான். ஆனால் வெளியில் மட்டுமே நீங்க யோசிங்க, தியேட்டர்ல உட்கார்ந்து பார்க்காதீங்க அப்படின்னு அடிச்சு சொல்லிட்டாரு. ஆனால் ஒரு திரைப்படமாக இந்த படம் நிச்சயமாக பார்க்கத் தகுந்த ஒரு திரைப்படம்.

ஆனா குடும்பத்தோடு போயிறாதீங்க அப்படிங்கறத மட்டும் சொல்லிடுறேன். சின்ன பசங்களையும் கூட்டிட்டு போயிறாதீங்க. பெரியவங்க மட்டும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம். அவசியம் பாருங்க.

RATING : 4 / 5

Our Score