full screen background image

“ஓரம்போ, ஓரம்போ!!” – ‘டோரதி’ வண்டி வருது!

“ஓரம்போ, ஓரம்போ!!” – ‘டோரதி’ வண்டி வருது!

’டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாவதை முன்னிட்டு, இளையராஜாவின் இசையுடன் தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் ‘டோரதி’யின் கேரவன்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.

மதுரையில் இருந்து ஸ்பெஷலான லாரி ரோடு ட்ரிப் தொடங்கியுள்ளது.

திரைப்படத்தின் உலகையும், மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசையையும் தமிழ்நாடு முழுவதும் ரசிகர்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்கும் வகையில் இந்தப் பயணம் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக, மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசை ஒளியின் வேகத்தைவிட வேகமாகப் பயணித்து வருகிறது.

தலைமுறைகள், புவியியல் எல்லைகள், மொழிகள் என அனைத்தையும் கடந்து அனைவருடனும் கலந்துள்ள அந்த இசை, இப்போது ‘டோரதி’ திரைப்படத்திற்கும் சிறப்பு சேர்த்துள்ளது.

இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கேரவன் தமிழ்நாடு முழுவதும் பயணிக்கிறது.

‘டோரதி’ திரைப்படத்தின் கதையுலகில் முக்கியமான இடம் பெறும் ஒன்றால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கேரவன், திரைப்பட விளம்பரப் பயணத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இல்லாமல், மேஸ்ட்ரோ இளையராஜாவின் ஒரிஜினல் ஸ்கோர் இசையையும் தன்னுடன் எடுத்துச் செல்கிறது.

நகரங்கள் மற்றும் ஊர்கள் வழியாக இந்தக் கேரவன் பயணிக்கும்போது, இளையராஜாவின் இசையும் ‘டோரதி’யுடன் இணைந்து பயணிக்கிறது.

இதன் மூலம் திரைப்படம் திரையரங்குகளை அடைவதற்கு முன்பே ரசிகர்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தை தரும்.

மதுரையில் தொடங்கிய இந்த ரோடு ட்ரிப் நிகழ்வில், திரைப்படத்தின் கதாநாயகர்களில் ஒருவரான ரிஷிகாந்த், இந்த லாரியை ஓட்டியபடி பயணத்தைத் தொடங்கி வைத்தார்.

இன்று மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் வழியாகப் பயணிக்கும் இந்த கேரவன், நாளை பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூர் நோக்கிச் செல்கிறது.

மதுரையில் இருந்து புறப்படும் இந்தக் கேரவன், மேஸ்ட்ரோ இளையராஜா பிறந்த ஊரான தேனி வழியாகச் சென்று, பின்னர் ‘டோரதி’ திரைப்படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்ட திண்டுக்கல் பகுதிக்குச் செல்கிறது.

எனவே, திரைப்படத்தின் கதையுலகம், படப்பிடிப்பு நடைபெற்ற இடங்கள் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை என ரசிகர்களை கவர இருக்கிறது.

’டோரதி’ திரைப்படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச திரைப்பட விழாக்கள் மற்றும் சிறப்புத் திரையிடல்களில் திரைப்படம் பங்கேற்றிருப்பதும் சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லரும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

‘டோரதி’ திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முக்கிய அம்சங்களில் ஒன்றாக இசைஞானி இளையராஜாவின் இசையும் அமைந்துள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இசை மற்றும் ஒரிஜினல் சவுண்ட் டிராக், இசை ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேஸ்ட்ரோவின் இசை, கார்த்திக் சுப்புராஜ் உருவாக்கியுள்ள உலகிற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது.

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், சனாந்த் மற்றும் ரிஷிகாந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தை ஜோதி தேஷ்பாண்டே, குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இப்படத்தை வழங்குகின்றன.

சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.

எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். கணேஷ் சிவா படத்தொகுப்பாளராகவும், பவன் நரேந்திரா நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். கூடுதல் திரைக்கதையை சரவணன் சந்திரன் எழுதியுள்ளார்.

தொழில் நுட்பக் குழுவில் ஆக்ஷன் இயக்குநர் தினேஷ் சுப்பராயன், நடன இயக்குநர் ஷெரிஃப் எம்., ஆடை வடிவமைப்பாளர் பிரவீன் ராஜா, சிங்க் சவுண்ட் டிசைனர் தாமஸ் குரியன் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் குமார் கங்கப்பன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Our Score