full screen background image

“சீனு ராமசாமி போல படம் இயக்க இங்கு யாருமில்லை” – விஜய் சேதுபதியின் பாராட்டு.,.!

“சீனு ராமசாமி போல படம் இயக்க இங்கு யாருமில்லை” – விஜய் சேதுபதியின் பாராட்டு.,.!

தமிழ் ஓடிடி தளத்தில் கோலோச்ச ஆரம்பித்திருக்கும் ஆஹா’ ஓடிடி தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடாக, இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘மாமனிதன்’ திரைப்படம் ஜூன் 14-ம் தேதி வெளியாகியுள்ளது.

இப்படத்தை இப்போது 155 நாடுகளில் ஆஹா’ ஓடிடி தளத்தின் வழியாக கண்டுகளிக்கலாம். இதனை ஒட்டி படக் குழுவினர் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி பேசும்போது, “இந்தப் படத்தை திரையரங்கில் தவற விட்டவர்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, வீட்டில் இந்தப் படம் பார்ப்பவர்களுக்கு இந்த ராதாகிருஷ்ணன் நெருக்கமானவனாகிவிடுவான்.

இந்த மாமனிதன்’ குறித்து என்னிடமும் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது, ஆனால் எதற்கும் நான் பதில் சொல்லவில்லை. ஒரு கதாப்பாத்திரம் நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் நடக்க முடியாது. நடக்க தேவையில்லை.

சீனு ராமசாமி சார்போல் ஒரு படம் எடுக்க இங்கு யாரும் இல்லை. இந்தப் படம் நான் டப்பிங் பண்ணும்போது பார்க்கையில், அத்தனை உயிர்ப்புடன் இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த படமாக இருந்தது. இந்தப் படம் காலத்தால் அழியாது. காலங்கள் கடந்தும் நிற்கும். இந்தப் படத்தை ‘ஆஹா’ ஓடிடி தளத்தில் பார்த்து ரசியுங்கள்…” என்றார்.

Our Score