full screen background image

நடிகை சுஷ்மிதா சென்னின் புதிய காதலர் லலித் மோடி..!

நடிகை சுஷ்மிதா சென்னின் புதிய காதலர் லலித் மோடி..!

முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் 10-வது காதலரைத் தேடிப் பிடித்துவிட்டார்.

தற்போது இந்தியாவில் இருந்து தப்பியோடி லண்டனில் வசித்து வரும் இந்திய ஐ.பி.எல். கிரிக்கெட்டை தோற்றுவித்த முன்னாள் தலைவரான லலித்மோடிதான் சுஷ்மிதா சென்னின் புதிய காதலர்.

சுஷ்மிதா சென் 1994-இல் பிரபஞ்ச அழகி (மிஸ் யூனிவர்ஸ்) பட்டத்தை வென்றவர். அதிகளவில் இந்தி மொழி படங்களில் நடித்துள்ள நடிகை சுஷ்மிதா சென், தமிழில் 1997-இல் வெளியான ‘ரட்சகன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

நடிகை சுஷ்மிதா சென், 2000-ம் ஆண்டில் ரெனி என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார். மேலும் அலிசா பெண் என்ற குழந்தையை 2010-ல் தத்தெடுத்துக் கொண்டார். இவர்கள் இப்போது ஒரே குடும்பமாக, வாழ்ந்து வருகின்றனர்.

சுஷ்மிதா சென்னின் வாழ்க்கையில் அவரது காதலர்களாக இதுவரையிலும் 9 பேர் இருந்திருக்கிறார்கள். கடைசியாக ரோஹ்மன் சால் என்ற இளைஞருடன் வாழ்ந்து வந்த சுஷ்மிகா அந்தத் தொடர்பை சமீபத்தில்தான் ‘கட்’ செய்தார்.

சுஷ்மிதா சென்னின் காதலர்களாக இருந்த 9 நபர்களில் 2 பேரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் சுஷ்மிதா சென்னைவிடவும் 10 வயதுக்கும் குறைவான வயதையுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்போதுதான் தன்னைவிடவும் 12 வயது கூடிய ஒருவரைப் பிடித்திருக்கிறார் சுஷ்மிதா சென்.

இது குறித்து லலித்மோடி தனது சமூக வலைத்தளத்தில் சில புகைப்படங்களுடன் செய்தியை வெளியிட்டுள்ளார்.

‘என்னில் சிறந்த பாதி’ என்ற குறிப்புடன் சுஷ்மிதா சென்னுடன் தான் இருக்கும் புகைப்படத்தை அந்தக் சுட்டுரையில் பகிர்ந்து சமூக வலைத்தளங்களை நேற்றைய இரவில் சூடாக்கினார் லலித் மோடி.

“குடும்பத்துடன் உலக சுற்றுலாவை நிறைவு செய்து விட்டு லண்டன் திரும்புவதாகவும், என்னில் சிறந்த பாதி சுஷ்மிதா சென்..” என்று லலித் மோடி கூறியுள்ளார்.

இந்த புகைப்படங்களைப் பார்த்த வலைத்தளவாசிகள், லலித் மோடிக்கு தங்களது வாழ்த்துகளைப் பதிவிட்டதோடு, தேனிலவு முடிந்த பிறகாவது இந்தியாவுக்குத் திரும்புவீர்களா என்பது போன்ற கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்திருக்கும் லலித் மோடி, “விளக்கம் அளிப்பதற்காகவே இந்தப் பதிவு. நாங்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை – இரண்டு பேரும் டேட்டிங் சென்றிருந்தோம்.. அவ்வளவே. ஒரு நாள் அதுவும்கூட நடக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Our Score