full screen background image

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி துவங்கியது..!

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி துவங்கியது..!

‘ஜில்லா’வால் கல்லா கட்டியதா இல்லையா என்ற சர்ச்சையெல்லாம் இன்னமும் ஓயாத நிலையில் அதையே நினைச்சுக்கிட்டிருந்தா,  பொழைப்பை பார்க்க முடியாதே என்பதால் விஜய் தனது அடுத்தப் படத்தில் இறங்கிவிட்டார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் பெயர் வைக்கப்படாத புதிய படத்தின் ஷூட்டிங் இன்று கொல்கத்தாவில் புகழ் பெற்ற காளிகோவிலில் துவங்கியுள்ளது. LYCA Productions Pvt.Ltd என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார். சமந்தா, விஜய்யுடன் நடிக்கும் முதல் படம் இதுதான்..! ஜார்ஜ் சி.வில்லியம் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். லால்குடி இளையராஜா கலை இயக்கம் செய்கிறார்.  

விஜய்யின் படங்களுக்கு எத்தனை மவுசு இருந்தாலும், நிரந்தரமான வசூல் இருந்தாலும், ஒவ்வொரு படத்திலும் டெக்னீஷியன்களின் சம்பளம் ஏறிக் கொண்டேயிருப்பதால் எப்போதும் கிடைக்கும் வசூல் படத்தின் பட்ஜெட்டைவிட குறைவாகவே இருக்கிறது.. இதனை இந்தப் படத்தின் தயாரிப்பாளராவது புரிந்து கொண்டு பட்ஜெட்டை குறைத்து படமெடுத்து, படம் நஷ்டம் என்று சொல்லாமல் இருக்க வேண்டும்..!
Our Score



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *