full screen background image

ராம்பாலா இயக்கும் புதிய படம் ‘வந்தான் சுட்டான் ரிப்பிட்டு’

ராம்பாலா இயக்கும் புதிய படம் ‘வந்தான் சுட்டான் ரிப்பிட்டு’

2 MB நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராம்பாலாவின் இயக்கத்தில் சந்திரமௌலி – மீனாக்‌ஷி கோவிந்தராஜன் – ரெபா மோனிகா நடிக்கும் வந்தான் சுட்டான் ரிப்பிட்டு’ படம் இன்று துவங்கியது.

தரமான கதைகளை தேர்ந்தெடுத்து தயாரிக்கும் தயாரிப்பாளர் 2 MB தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளரான ரகுநாதன் P.S தற்போது தொடர் வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்குநர் ராம்பாலாவின் இயக்கத்தில் ‘வந்தான் சுட்டான் ரிப்பிட்டு’ எனும் புதிய படத்தை தயாரிக்கிறார்.

காமெடி கலந்த திகில் படமாக உருவாகும் இந்த ‘வந்தான் சுட்டான் ரிப்பிட்டு’ படத்தில் சந்திரமௌலி நாயகனாக நடிக்கின்றார். மீனாக்‌ஷி கோவிந்தராஜன், ரெபா மோனிகா இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். மனோபாலா, ஊர்வசி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – சேவிலோ ராஜா, இசை – சந்தோஷ் தயாநிதி, K.C.பாலசாரங்கன், கலை இயக்கம் – கிருஷ்ணா, படத் தொகுப்பு – K.J.வெங்கட்ரமணன், காஸ்ட்யூம் டிசைனர் – சோபியா ஜெனிபர், ஒப்பனை – ராஜா, சண்டைப் பயிற்சி இயக்கம் – விக்கி, தயாரிப்பு மேற்பார்வை – சேகர், நிர்வாகத் தயாரிப்பு – G.பிரதீப் குமார், சன் செந்தில், புகைப்படங்கள் – சக்தி, மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM).

இன்று இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

 
Our Score