full screen background image

‘வளையல்’ படத்தின் முன்னோட்டம்

‘வளையல்’ படத்தின் முன்னோட்டம்

B.R. மூவி மேக்கர்ஸ் சார்பாக  B.R.காளியப்பன் தயாரித்திருக்கும் புதிய படம் ‘வளையல்’.

இந்தப் படத்தின் கதாநாயகனாக சக்தி சிவன், கதாநாயகியாக பாவ்யாஸ்ரீ நடித்துள்ளனர். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யஜித், மனோஜ் கே.பாரதி உட்பட பலர் நடித்துள்ளனர்.

002

ஒளிப்பதிவு – ஜி.சிவா, இசை – டி.எஸ்.முரளி சுப்ரமணி, படத் தொகுப்பு – பாஸில், கலை இயக்கம் – மதன், சண்டை பயிற்சி – சுரேஷ், நடனம் – சதீஷ் முத்துப்பாண்டி, பாடல்கள் – சினேகன், மோகன்ராஜ், பி.ஆர்.ஓ. – நிகில், வசனம் – சரவணன், எழுத்து, இயக்கம் – ஏ.குருசேகரா, தயாரிப்பு – பி.ஆர்.காளியப்பன்.

003

கதாநாயகி கேட்கும் திறன் படைத்த ஊமை. கதாநாயகன் கதாநாயகி மீது காதல் வயப்படும் போதெல்லாம் தான் ஊமை என்னும் உண்மையை சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் கதாநாயகனுக்கு தெரியப்படுத்தாமல் மறைக்கிறாள். ஆனால் ஒரு நாள் கதாநாயகனுக்கு உண்மை தெரியவருகிறது. அதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்யமான சம்பங்களே இந்த ‘வளையல்’ படத்தின் கதை.

001

இப்படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குபவர் A.குருசேகரா. இப்படத்தை அனைவரும் ரசிக்கும்படி மிகவும் ஜனரஞ்சகமான முறையில் எடுத்திருக்கிறார். இவர் இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score