full screen background image

வைபவ் – அதுல்யா ரவி படத்தை இயக்கும் இரட்டை இயக்குநர்கள்

வைபவ் – அதுல்யா ரவி படத்தை இயக்கும் இரட்டை இயக்குநர்கள்

BTG UNIVERSAL நிறுவனம் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தை விக்ரம் ராஜேஸ்வர் – அருண் கேசவ் என்கிற இரட்டை இயக்குநர்கள் இயக்குகின்றனர்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக வைபவ் நடிக்க, கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்கிறார். மேலும் மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, இளவரசு, பி.எல் தேனப்பன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

தயாரிப்பு நிறுவனம் : BTG UNIVERSAL, (BOBBY TOUCH GOLD UNIVERSAL PVT LTD), தயாரிப்பாளர் – பாபி பாலச்சந்திரன், வியூகத் தலைமை(BTG) – மனோஜ் பினோ, இயக்கம் – விக்ரம் ராஜேஸ்வர், அருண் கேசவ், இசை – D.இமான், ஒளிப்பதிவு – டிஜோ டோமி, படத் தொகுப்பு – சுரேஷ் A.பிரசாத், கலை இயக்கம் – அருண் சங்கர் துரை, சண்டை இயக்கம் – டான் அசோக், தயாரிப்பு நிர்வாகம் – வேணுகோபால், உடைகள் – தாக்ஷா தயாள், பத்திரிக்கை தொடர்பு – ரியாஸ் K.அஹ்மத், டிசைன்ஸ் – ஷைனு.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் வைபவ், நாயகி அதுல்யா ரவி, நடிகர் ஆனந்த்ராஜ், இயக்குநர்கள், மனோஜ் பினா மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Our Score