full screen background image

விஜய் சேதுபதி, சசிகுமார் வெளியிட்ட ‘பிரம்ம முகூர்த்தம்’ பட ஃபர்ஸ்ட் லுக்..!!

விஜய் சேதுபதி, சசிகுமார் வெளியிட்ட ‘பிரம்ம முகூர்த்தம்’ பட ஃபர்ஸ்ட் லுக்..!!

K.V.Media நிறுவனத்தின் தயாரிப்பாளரான P.செந்தில்நாதன் தயாரித்துள்ள திரைப்படம் ‘பிரம்ம முகூர்த்தம்’.

இந்தப் படத்தில் இளம் நாயகன்  விஜய் விஷ்வா நாயகனாக  நடிக்க, அபர்ணா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மதன்பாப், அப்புகுட்டி, பெஞ்சமின், C.ரங்கநாதன், அனுமோகன், விஜய கணேஷ், இமான் அண்ணாச்சி, T.S.R., கோதண்டம், அறந்தாங்கி சங்கர், சின்னத்திரை தளபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பு நிறுவனம் – K.V.Media, தயாரிப்பாளர் –  P.செந்தில்நாதன், கதை, திரைக்கதை, இயக்கம் – T.R.விஜயன், வசனம் –  ஜாபர், இசை – ்ரீ சாஸ்தா, ஒளிப்பதிவு – EJ.நவ்ஷாத், பாடல்கள் – சினேகன், C. பாலமுருகன், A.P. ராஜா, படத் தொகுப்பு –  பிரவீன் குமார், நடன இயக்கம் – சேஷவ் தபூர், சண்டைப் பயிற்சி இயக்கம் – பம்மல் ரவி, பத்திரிக்கை தொடர்பு – A.ராஜா.

ஒரு இளம் ஜோடியின் திருமண ஏற்பாட்டில்  நடக்கும்  களேபரங்களும், அதைக் கடந்து அந்த திருமணத்தை நடத்த, நாயகன் நடத்தும் போராட்டங்களும், பரபர திரைக்கதையில், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இந்த பிரம்ம முகூர்த்தம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநரும், நடிகருமான சசிகுமார்  ஆகியோர் இன்றைக்கு வெளியிட்டனர்.

காமெடி ஜானரில் மாறுபட்ட திரை அனுபவமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்காடு, சென்னை, திருவள்ளூர் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுதாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப்  பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

Our Score