வனிதா விஜயகுமார் நடிக்கும் ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ திரைப்படம்

வனிதா விஜயகுமார் நடிக்கும் ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ திரைப்படம்

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ. இவர் தற்போது ‘அழகிய கண்ணே’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் தம்பியான ஆர்.விஜயகுமார் இயக்குகிறார்.

தற்போது தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மற்றுமொரு படத்தைத் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தை மணி நாகராஜ் இயக்கியுள்ளார். படத்தின் பெயர் ‘வாசுவின் கர்ப்பிணிகள்’.

வித்தியாசமான தலைப்பைக் கொண்ட இத்திரைப்படம் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படும் படமாம். ஒரு மருத்துவர் தன் வாழ்க்கையில் சந்தித்த வினோதமான 4 கர்ப்பிணிகளைப் பற்றிய கதைதான் இத்திரைப்படம்.

இந்தப் படத்தில் மருத்துவராக கோபிநாத் நடிக்க.. முக்கியக் கதாபாத்திரங்களில் வனிதா விஜயகுமார், அபிஷேக், சீதா, அனிகா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. படத்தை மிக விரைவில் முடித்துவிட்டு திரைக்குக் கொண்டு வரும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

Our Score