full screen background image

கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் ‘ஆதார்’ திரைப்படம்..!

கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் ‘ஆதார்’ திரைப்படம்..!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் கருணாஸ் மீண்டும் நாயகனாக நடிக்கிறார்.

‘திண்டுக்கல் சாரதி’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘சாந்தமாமா’, ‘ரகளபுரம்’ ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்திருந்தார் கருணாஸ். இதற்கிடையில் பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரங்களிலும், காமெடி நடிகராகவும் நடித்திருந்தார்.

கடந்த 5 வருடங்களில் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்ததால் அதிகமாகப் படங்களில் நடிக்காமல் இருந்தவர் இப்போது மீண்டும் நாயகனாக நடிக்க வந்திருக்கிறார்.

இந்தப் படத்தை ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.ராம்நாத் இயக்குகிறார்.

இந்தப் புதிய படத்திற்கு ‘ஆதார்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.  இந்த ‘ஆதார்’ படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில்  அழகம்மை மகன் சசிகுமார் தயாரிக்கிறார்.

இதில் நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக்பாஸ்’ புகழ் நடிகை ரித்விகா நடிக்கிறார்.

இவர்களுடன் நடிகர் அருண் பாண்டியன், வத்திக்குச்சி’ பட புகழ் திலீப், ‘பாகுபலி’ பட புகழ் பிரபாகர், நடிகை மனிஷா யாதவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சிகளை கவனிக்க, படத் தொகுப்பை ஜெய் மேற்கொள்கிறார். கலை இயக்குநர் பொறுப்பை ஜான் பிரிட்டோ ஏற்க, இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக ஏ.பி.ரவி பணியாற்றுகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.

Our Score