‘வெங்காய வெடி’ என்னும் குடும்பக் கதை கொண்ட திரைப்படம்

‘வெங்காய வெடி’ என்னும் குடும்பக் கதை கொண்ட திரைப்படம்

அந்தமான் ரியல் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘வெங்காய வெடி.’  

ஸ்ரீகண்டா’ திரைப்படத்தின் கதாநாயகனான கார்த்திக் ஸ்ரீராம் இத்திரைப்படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடிக்கிறார். கதாநாயகிகளாக இளமி’, ‘ஸ்ரீராமானுஜம்’, ‘அலைபேசி’ ஆகிய திரைப்படங்களில் நடித்த அனு கிருஷ்ணா மற்றும் ‘ரூம் மேட்’, ‘பாபிலோன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்த காதம்பரியும் நடிக்கிறார்கள்.

மேலும், இயக்குநர் செந்தில்நாதன், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், வையாபுரி, ரமேஷ் கண்ணா, ரம்யா, கௌதமி, சாப்ளின் பாலு, கிரேன் மனோகர், கிங்காங், வெங்கல்ராவ், பிர்லா போஸ், அன்புமணி, செல்வரகு, ஜெகநாதன், பஞ்சர் பாண்டி, மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

எழுத்து இயக்கம் – D.S.பிரகாஷ், ஒளிப்பதிவு – P.கல்யாண சுந்தரம், வசனம் – R.வீரமணி, இசை – C.K.பிரியன், படத் தொகுப்பு – B.S.வாசு, நடன இயக்கம் – கம்பு முருகன், சண்டை இயக்கம் – பவர் பாஸ்ட், பாடகர்கள் – அனுராதா ஸ்ரீராம், சைந்தவி, பிரசன்னா, தீபா மரியம், மக்கள் தொடர்பு – செல்வ ரகு, தயாரிப்பு – K.S.பாரதிராஜா, P.அருள்ராஜ், வெற்றி.R. 

இத்திரைப்படம் பற்றி இயக்குநர் டி.எஸ்.பிரகாஷ் பேசும்போது, “மதுரையிலிருந்து சென்னைக்கு வந்த நாயகன் நான்கு ஆண்டுகளாக மிகப் பெரிய நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றுகிறான். அவன் வாழ்வில் அனைத்தும் நினைத்தபடியே சந்தோஷமாக இருக்கிறது.

ஆனால், காதலித்துதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவனது தலையாய ஆசை. ஆனால் அவன் நினைத்தபடி காதலிக்கும் தகுதியுள்ள காதலிகள் யாரும் அமையவில்லை. தனது கனவு தேவதையை தேடிக் கொண்டிருக்கிறான். 

இந்த நேரத்தில் அவனது தந்தை அவனுக்கு கட்டாயமாக திருமணம் செய்து வைக்கிறார். நடந்த திருமணத்தில் அவனுக்கு ஈடுபாடில்லை. எனவே திருமணம் முடிந்த மூன்றாவது நாளே சென்னை திரும்புகிறான்.

நாயகனை  தேடி அவனது மனைவியும் சென்னை வருகிறாள். நாயகனை  சந்திக்கும் நாயகி அவனிடம் ஒரு யோசனையை சொல்கிறாள். அந்த விபரீத யோசனையால் நடந்த பிரச்சனைகளை நாயகன் எவ்வாறு எதிர்கொள்கிறான்..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை…” என்றார்.

இத்திரைப்படம் சென்னை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. பாடல் காட்சிகள் அனைத்தும் அந்தமான் தீவுகளில் படமாக்கப்படுமாம்.

 
Our Score