2016 பொங்கல் ரிலீஸ் ‘உள் குத்து’ திரைப்படம்..!

2016 பொங்கல் ரிலீஸ் ‘உள் குத்து’ திரைப்படம்..!

தற்போது தயாராகி வரும் படங்களில் ‘உள் குத்து’ திரைப்படம் பெரிதும் எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக இருக்கிறது.

kenanya films ஜே. .செல்வகுமார் தயாரிப்பில், ‘அட்டக் கத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்க, கார்த்திக் ராஜு இயக்க, ‘திருடன் போலீஸ்’ படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த அதே வெற்றிக் கூட்டணி மீண்டும் இந்த உள்குத்து படத்திலும் இணைகிறது.

ஜி.விட்டல் குமார் இணை தயாரிப்பில் உருவாகிவரும் இந்த ‘உள் குத்து’  திரைப்படம் வர்த்தக ரீதியாக, எல்லா தரப்பு மக்களையும் கவரும் படமாக இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.

தினேஷுக்கு இணையாக நந்திதா நாயகியாக நடித்திருக்கிறார். மேலும்  பால சரவணன், ஜான் விஜய், சாயா சிங், ஸ்ரீமன், ‘பாண்டிய நாடு’ சரத், திலிப் சுப்புராயன், மற்றும் சமையல் கலை தாமோதரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

“இந்த ‘உள் குத்து’ திரைப்படம் கண்களை மட்டுமல்ல, கருத்தையும் கவரும் வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது. கடல் சார்ந்த மீனவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக இருக்கும். எனது முந்தைய படமான ‘திருடன் போலீஸ்’ என் மீது ஏற்படுத்தியுள்ள அபிப்ராயத்தை இந்தப் படமும் காப்பாற்றும். இடைவிடாத படப்பிடிப்பை தொடர்ந்து இப்போது படம் இறுதிக் கட்ட பணிகளை எட்டியிருக்கிறது.

‘உள் குத்து’ படத்தின் First look ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படம் வெளிவரும்  நாளில் வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.  2016-ம் பொங்கல் தினத்தன்று  ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது ‘உள் குத்து..” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்  இயக்குநர் கார்த்திக் ராஜு. 

Our Score