நடிகர் கமல்ஹாசனுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் ஆன தொடர்பு அறிந்ததே. எழுத்தாளர்களை மதிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களைத் தேடிச் சென்று, நெருங்கிப் பழகி வருபவர்.
ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளின்போது எழுத்தாளர்களுக்கு பரிசளித்து, அவர்களுக்கு மரியாதை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்த வருடம் தனது 61-வது பிறந்த நாளை முன்னிட்டு, புதுவையில் வசிக்கும் மூத்த எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி. ராஜநாராயணனை நேரில் சந்தித்து அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கி அவரை கௌரவித்தார்.
இந்தச் சந்திப்பின்போது ‘தூங்காவனம்’ திரைப்படத்தின் வசனகர்த்தாவான எழுத்தாளர் சுகாவும் உடன் இருந்தார்.
Our Score