நடிகர் ‘அட்டக்கத்தி’ தினேஷும் இயக்குநராகிறார்..!

நடிகர் ‘அட்டக்கத்தி’ தினேஷும் இயக்குநராகிறார்..!

வளர்ந்து வரும் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான ‘அட்டக்கத்தி’ தினேஷ் இப்போது இயக்குநராகப் பிரமோஷன் பெறுகிறாராம்.

‘அட்டக்கத்தி’, ‘குக்கூ’, ‘விசாரணை’, ‘திருடன் போலீஸ்’, ‘ஒரு நாள் கூத்து’, ‘உள்குத்து’, ‘அண்ணனுக்கு ஜே’, ‘கபாலி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் தினேஷ்.

தற்போதுகூட ‘வாராயோ வெண்ணிலவே’, ‘பல்லு படாம பார்த்துக்க’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் தினேஷ்.

இந்த நேரத்தில் இவருக்குள்ளும் இயக்குநராகும் ஆசை பிறந்துள்ளது. இதற்கான கதை, தயாரிப்பாளரை முடிவு செய்து படத்தின் பெயரையும் தயார் செய்துவிட்டார். படத்திற்கு வைத்திருக்கும் டைட்டில் ‘வயிறுடா’.

இந்த டைட்டிலே படம் எதைப் பற்றியது என்பதைக் காட்டுகிறது. ‘அட்டக்கத்தி’ படத்தில் துவங்கி கடைசிப் படம் வரையிலும் சமூக சிந்தனை கொண்ட கேரக்டர்களிலேயே நடித்திருந்த தினேஷ், தான் இயக்கும் முதல் படத்தின் கதையையும் அப்படியே தயார் செய்திருக்கிறார்.

இந்த ‘வயிறுடா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தினேஷ்.

இதையடுத்து அந்தத் தளத்தில் பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துச் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.

Our Score