full screen background image

டைம்லைன் சினிமாஸின் புதிய படம்..!

டைம்லைன் சினிமாஸின் புதிய படம்..!

‘பீட்சா’, ‘அட்டக்கத்தி’, ‘தெகிடி’ ஆகிய படங்களைத் தயாரித்த திருக்குமரன் எண்ட்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சி.வி.குமார் தயாரித்த படங்களில் துணை தயாரிப்பாளராக இருந்து வந்த சுந்தர், இப்போது தனியாக தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கியிருக்கிறார். ‘டைம் லைன் சினிமாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளத தனது நிறுவனம் சார்பில் தனது முதல் பட தயாரிப்பை துவக்கியுள்ளார் சுந்தர்.

Time Line Cinemas - Production No 1 Pooja Stills (3)

இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஜி.மணிகண்டன் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். ‘அட்டகத்தி’ தினேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் காளி, வேலா, ராமமூர்த்தி கலையரசன், டேனியல், ‘சூது கவ்வும்’ கோபி, ‘முண்டாசுபட்டி’ ராமதாஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

Time Line Cinemas - Production No 1 Pooja Stills (1)

இப்படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. விழாவில் படக் குழுவினருடன் தயாரிப்பாளர்கள் சி.வி.குமார், ஞானவேல்ராஜா மற்றும் இயக்குனர்கள் ரஞ்சித், பி ரமேஷ், பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Technicians List

Director – G. Manikandan

Producer: A. Sundar

Music Director – Santhosh Narayanan

DOP – PK Varma

Lyrics – Kabilan, Yuga Bharathi, Uma Devi, Muthamizh

Art Director – Gopi Anandh

Our Score