எஸ்.பி.பி.சரணின் தயாரிப்பில் ‘திருடன் போலீஸ்’..!

எஸ்.பி.பி.சரணின் தயாரிப்பில் ‘திருடன் போலீஸ்’..!

தமிழ் திரை உலகில் மாற்றம் ஏற்படுத்திய சில வெற்றி படங்களை தயாரித்து வழங்கிய எஸ்.பி.பி. சரண், மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஜே.செல்வகுமாருடன் இணைந்து வழங்கும் படம்தான் இந்தத் ‘திருடன் போலீஸ்’.

IMG_4448

பால்ய பருவத்தில் இருந்தே ஓட, விரட்ட என்று பழக்கப்பட்ட கதையை நவீன மயமாக்கி, பல்வேறு கதாபாத்திரங்களின் துணையோடு நகைச்சுவை கலந்த எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் படமாக்கப்பட்ட ‘திருடன் போலீஸ்’ படப்பிடிப்பு முடிந்து வெளி வரும் தருவாயில் உள்ளது.

IMG_4991

கம்ப்யூட்டர் தொழில் நுட்ப காட்சிகளில் பிரசித்தி பெற்ற கார்த்திக் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

‘ஆட்ட கத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்க , அவருக்கு இணையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் தனக்கு நிலையான பெயரை நிலைநிறுத்தி கொள்ள மெனக்கெடும் தினேஷுக்கு ‘ திருடன் போலீஸ்’ ஒரு மாறுபட்ட படமாக இருக்கும்.

IMG_4787

நித்தின் சத்யா, பால சரவணன், ‘ நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜான் விஜய் ஆகிய நால்வரும் இந்த கதையை தாங்கி பிடிக்கும் முக்கிய தூண்கள். மூத்த நடிகர் ராஜேஷ் பொறுப்பில்லாமல் இருக்கும் ஒரு பிள்ளையின் கண்டிப்பான, கண்ணியமான ஒரு தந்தையின் கதாபாத்திரத்தை தனது யதார்த்தமான நடிப்பால் நம் கண் முன் நிறுத்துகிறார்.

புதிய முயற்சிகளுக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் இந்தத் ‘திருடன் போலீஸ்’ ஜூலை மாத இறுதியில் வெளிவருகிறது.

Our Score