full screen background image

‘தெறி’ படம் அமோக விற்பனையாம்..!

‘தெறி’ படம் அமோக விற்பனையாம்..!

இளைய தளபதி விஜய் நடிப்பில் வரும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று வெளியாகவிருக்கும் ‘தெறி’ படம் மிகப் பெரிய தொகைக்கு வியாபாரமாகியிருக்கிறது. இது விஜய் பட வரலாற்றிலேயே அடுத்த சாதனை என்கிறார்கள் திரையுலகத்தினர்.

‘தெறி’ படத்தின் சென்னை மற்றும் செங்கல்பட்டு விநியோக உரிமையை ஸ்பை சினிமாஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது.

தென் ஆற்காடு பகுதியின் உரிமை 3.50 கோடி ரூபாய்க்கு டாக்டர் ஆல்பர்ட்டின் கைக்கு போயிருக்கிறது.

வட ஆற்காடு உரிமையை அலங்கார் தியேட்டர் தேவராஜ் 3.25 கோடிக்கு வாங்கியிருக்கிறார்.

திருச்சி, தஞ்சை உரிமை 5.60 கோடி ரூபாய்க்கு பி.கே.நாராயணசாமிக்கு கிடைத்திருக்கிறது.

சேலம் ஏரியாவை 7ஜி சிவா 4.60 கோடிக்கு வாங்கியிருக்கிறார்.

கோவை ஏரியா உரிமையை மோனிகா பிலிம்ஸ் செந்தில் 8 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்.

மதுரை, இராமநாதபுரம் ஏரியா உரிமையை இயக்குநர் அமீர் 6.90 கோடிக்கு வாங்கியிருக்கிறார்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி உரிமையை மன்னன் பிலிம்ஸ் 3.25 கோடிக்கு பெற்றுள்ளது.

இவைகள் அனைத்தும் அவுட்ரேட் முறையில் விற்கப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.

மேலும் கேரளா உரிமையை கார்னிவல் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் உரிமையை பிரபல தெலுங்கு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ பெற்றுள்ளார்.

கர்நாடக உரிமையை சவுத் சைட் ஸ்டூடியோஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது.

வட இந்திய உரிமை முழுவதையும் ராஜ்பாய் நிறுவனம் பெற்றுள்ளது.

பிற நாடுகளின் வெளியீட்டு உரிமையில் வட அமெரிக்காவில் சினி கேலக்ஸி நிறுவனம் வெளியிடுகிறது.

இலங்கை, ஐரோப்பா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் உரிமையை ஐங்கரன் நிறுவனம் பெற்றுள்ளது.

சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளின் உரிமையை சஞ்சய் வத்வா பெற்றுள்ளார்.

மலேசிய உரிமையை மாலிக் ஸ்டிரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் வாங்கியிருக்கிறது.

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உரிமையை எம்கேஎஸ் ரீடெயில் நிறுவனமும்,

ஜப்பானிய உரிமையை செல்லுலாய்ட் ஜப்பான் நிறுவனமும் வாங்கியிருக்கின்றன.

Our Score