12 மொழிகளில், 3500-க்கும் அதிகமான திரைப்படங்கள், 500+ டிவி நிகழ்ச்சிகள், 4000+ மியூசிக் வீடியோக்கள், 35+ நாடகங்கள் மற்றும் 80+ நேரலை டிவி சேனல்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ZEE5 OTT தளம், இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள அதன் ரசிகர்களுக்காக நிகரற்ற சேவையை வழங்கி வருகிறது.
இந்தியாவின் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இந்த ZEE5- பொழுதுபோக்குத் தளத்தில் இப்போது புதிதாக நையாண்டி-நகைச்சுவை கலந்த ஷோவான ‘மெட்ராஸ் மீட்டர்’ என்ற நிகழ்ச்சியும் இடம் பெற்றுள்ளது.
இந்த நகைச்சுவை நிகழ்ச்சி வெறுமனே நகைச்சுவையாக மட்டுமில்லாமல் சமகாலத்திய அரசியல் மற்றும் பொதுவான செய்திகளை டாக் ஷோவின் பார்மெட்டில் தரவிருக்கிறது. வாராவாரம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த ‘மெட்ராஸ் மீட்டர் ஷோ’வில் கலந்து கொள்ளும் ஸ்டாண்ட்-அப் கலைஞர்கள் நாட்டு நடப்புக்களை தங்களுடைய வசீகரத் தன்மை கொண்ட திறமையில் வழங்குவார்கள். புனைவு சாராத இந்த ஷோ, ஒவ்வொரு வாரமும் இரண்டு பிரபலங்கள் கொண்ட விருந்தினர்களால் அலங்கரிக்கப்படும்.
இந்த ஷோவை தொகுத்து வழங்கவிருக்கும் திவ்யா இது பற்றிப் பேசுகையில், “இன்ஃபோடெயின்மெண்ட்’ என்ற சொல்லுக்கு ஏற்ற உண்மையான வகையில் ஒரு ஷோவை ZEE5 வழங்குவது மிகவும் பாராட்டுக்குரியது.
இந்தியாவில் இது முதல் வகையான ஷோவாக இருக்கும். இதில் செய்திகள் மிக எளிமையான முறையில் சொல்லப்படும். இந்த ஷோவின் ஒவ்வொரு எபிசோடும் ஒரே மாதிரியாக இல்லாமல் வித்தியாசமாக இருக்கும்…” என்றார்.
இந்த ஷோவை தொகுத்து வழங்கும் துர்கேஷ் தனது அனுபவம் பற்றி பேசுகையில், “இன்றைய அவசர கால யுகத்தில் வயதானவர்களுக்காக மிகக் குறுகிய நேரமே நம்மால் செலவழிக்க முடிகிறது. எனினும், நாம் அந்தச் சிறிய நேர சந்திப்பையும் நகைச்சுவையான முறையில் வழங்கினால்.. அந்தப் பெரியவர்களும் மகிழ்வார்கள். நமக்கும் பெரும் திருப்தி கிடைக்கும். இதனை மனதில் வைத்துதான் இந்த ‘மெட்ராஸ் மீட்டர் ஷோ’ வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது தகவல்கள், கருத்துகள், நகைச்சுவை மற்றும் ஈர்ப்பு ஆகியவற்றின் ஒன்று கலந்த ஒரு அருமையான கலவையாகும். உலகளாவிய அளவில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தையே கையில் வைத்திருக்கும் ZEE5 தளத்தில் இந்த நிகழ்ச்சியை வழங்குவதில் நாங்கள் பெரிதும் பெருமையடைகிறோம்..” என்றார்.
ZEE5 இந்தியா நிறுவனத்தின் தலைமை நிகழ்ச்சி அலுவலரான அபர்ணா அச்சேர்கர் இந்த நிகழ்ச்சி பற்றி பேசுகையில், “பொழுது போக்குத் துறையில் பல்வேறு வகையான முறையிலான நிகழ்ச்சிகளை நாங்கள் எங்களுடைய ZEE5 தளத்தில் தொடர்ந்து கொடுத்து வருகிறோம்.
அந்த வரிசையில் அடுத்து வரவிருக்கும் இந்த ‘தி மெட்ராஸ் மீட்டர் ஷோ’வும் தனக்கான ஒரு இடத்தைப் பிடிக்கவிருக்கிறது. இதுவொரு தனித்துவமான படைப்பாகும். எமது செயல் தளத்தில் இதை நாங்கள் வழங்குவதில் அளவற்ற உற்சாகமும், துடிப்பும் கொண்டிருக்கிறோம்.
இந்நிகழ்ச்சியை வழங்குவதற்கு மிகச் சிறந்த தொகுப்பாளர்களை இதில் இணைத்திருக்கிறோம். இந்த நிகழ்ச்சியை பார்வையாளர்கள் பெரிதும் மகிழ்ந்து இரசிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்…” என்று கூறினார்.
ZEE5 இந்தியா நிறுவனத்தின் வியாபாரப் பிரிவின் தலைவரான மனிஷ் அகர்வால் பேசும்போது, “எங்களுடைய ZEE5 தளத்தில் இதுவரையிலும் பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறோம். பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள், ஒரிஜினல்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தாங்கள் விரும்பும் மொழியில் பார்க்கலாம்.
பல்வேறுபட்ட சிறந்த நிகழ்ச்சிகளை உருவாக்கும் புதிய திறமைசாலிகளை கண்டறிந்து அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம். அந்த எண்ணத்தில் உருவானதுதான் இந்த ‘மெட்ராஸ் மீட்டர் ஷோ’. இந்த நிகழ்ச்சி நாங்கள் அறிந்தவரையிலும் மிகச் சிறப்பாகவே தயாராகியுள்ளது. எனவே இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்…” என்றார்.