திரைப்படங்களின் ஆடியோ உரிமையை வாங்குவதற்கு ‘Pink Music’ என்ற இசை நிறுவனத்துடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒப்பந்தம் செய்துள்ளதாம்.
இதனைப் பயன்படுத்தி தற்போது படமெடுத்து வரும் தயாரிப்பாளர்கள் தங்களது படங்களின் ஆடியோ உரிமையை விற்பனை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்கள்.
இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, “இதுவரையிலும் தங்களது திரைப்படங்களின் ஆடியோ உரிமையை விற்பனை செய்யாத தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவு செய்த தயாரிப்பாளர்களின் திரைப்படம் பற்றிய விவரங்கள் அந்த இசை நிறுவனத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அனுப்பி வைக்கும். உடனேயே அந்த இசை நிறுவனத்துடன் சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளர்கள் நேரடியாகப் பேசி தங்களது ஆடியோ உரிமையை விலை பேசி விற்பனை செய்து கொள்ளலாம்.
இந்த நேரடி பேச்சுவார்த்தைக்கும், விற்பனை முடிவுக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதுணையாய் இருக்கும்…” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.