full screen background image

AVM நிறுவனம் தயாரிக்கும் வெப் சீரீஸ் ‘தமிழ் ஸ்டாக்கர்ஸ்’

AVM நிறுவனம் தயாரிக்கும் வெப் சீரீஸ் ‘தமிழ் ஸ்டாக்கர்ஸ்’

75 வருட கால பாரம்பரியம்மிக்க ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் நிறுவனம், சோனி லிவ் நிறுவனத்துடன் இணைந்து ‘தமிழ் ஸ்டாக்கர்ஸ்’ என்ற க்ரைம், திரில்லர் கலந்த வெப் சீரீஸை தயாரிக்கிறது. இந்த வெப் சீரீஸ் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்தத் தொடரை ஏவி.எம். நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த அபர்ணா குகன், அருணா குகன் இருவரும் தயாரித்து வழங்குகிறார்கள்.

தமிழ்த் திரைப்பட உலகில் சமீப காலமாக நடக்கும் திரைப்பட திருட்டு கும்பலை மையமாகக் கொண்டு அதன் யதார்த்தங்களை இந்த தமிழ் ஸ்டாக்கர்ஸ்’ என்ற வெப் தொடர் சுவைபடச் சொல்கிறது.

ஒரு படைப்பை சட்ட விரோதமாகவும், அங்கீகாரம் இல்லாமலும் நகல் எடுப்பது பெரும் குற்றம் மட்டுமின்றி, படைப்புத் திருட்டு என்பது, உலகெங்கும் உள்ள படைப்பாளர்களின் பெரும் கவலைகளில் ஒன்றாகும்.

இந்தியாவில், தமிழ் திரையுலகம் பல்வேறு ஆன்லைன் திருட்டு வலைத்தளங்களின் காரணமாக இந்த பிரச்சினையுடன் முடிவில்லாத போரை நடத்தி வருகிறது. இந்தக் கதை அந்த திருட்டு உலகின் இருண்ட பக்கத்தை ஆழமாக சென்று காட்டுகிறது.

மேலும், திருட்டு உள்ளடக்கத்தை வெளியிடுவதில் ஈடுபட்டுள்ள குழுவை அடையாளம் காட்டுவதற்கு திரைத் துறையின் தொடர்ச்சியான நடத்தி வரும் போராட்டங்களைப் பற்றியும் சொல்கிறது.

புத்தம் புதிய, புதிரான, திரில்லர் கதைக் களம் கொண்ட இந்த ‘தமிழ் ஸ்டாக்கர்ஸ்’ என்ற படைப்பை இயக்குநர் அறிவழகன் இயக்க உள்ளார். இவர் ஏற்கெனவே தமிழில் மிக முக்கியமான ‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’, ‘குற்றம்-23’ ஆகிய படங்களை இயக்கியவர்.

இந்த வெப் தொடர் பற்றி ஏவி.எம். புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் தயாரிப்பாளர்களான அபர்ணா குகன், மற்றும் அருணா குகன் இருவரும் பேசுகையில், “நாங்கள் உருவாக்கவிருக்கும் இந்த ‘தமிழ் ஸ்டாக்கர்ஸ்’ படைப்பு திருட்டுத்தனமான பைரசி வீடியோ மற்றும் இணையத்தில் வெளியாகும் உரிமம் பெறாத திரைப்படங்களின் வெளியீட்டுக்கு எதிரான தமிழ் திரைத் துறையின் இடைவிடாத போராட்டம் பற்றியும்,  அதை எதிர்கொள்வதற்கான வழிகள் பற்றியும் பேசுகிறது.

எங்களுடைய இந்தப் படைப்பை SONY LIV தளத்துடன் இணைந்து பார்வையாளர்களிடத்தில் கொண்டுபோய் சேர்ப்பதில் நாங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளோம்.

இந்தப் படைப்பு ஒரு தலைப்பு செய்திக்கு பொருத்தமான புதிரான கதை அம்சத்துடன் விளங்குகிறது. இந்தத் தொடர் அறிவழகன் போன்ற தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குநருடன் இணைந்து வெற்றியை உறுதி செய்யும் என்று நம்புகிறோம்.

இந்தப் படைப்பு வெறுமனே பொழுதுபோக்குக்காக மட்டும் இன்றி அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். இந்தப் படைப்பு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் வெளி வரவிருக்கிறது…” என்றார்கள்.

 
Our Score