full screen background image

“கரா’ தலைப்பு எங்களுடையது!” – தனுஷ் படத்துக்கு வந்த பிரச்சினை!

“கரா’ தலைப்பு எங்களுடையது!” – தனுஷ் படத்துக்கு வந்த பிரச்சினை!

நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கரா’ (Kara) திரைப்படம் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதன் தலைப்பைச் சுற்றி சர்ச்சை எழுந்துள்ளது.

‘கரா’ என்ற தலைப்பை ஏற்கனவே பதிவு செய்துள்ளதாக கூறி, தயாரிப்பாளர் வேங்கை அய்யனார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“2021ஆம் ஆண்டிலேயே தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ‘கரா’ என்ற தலைப்பில் நாங்கள் படம் தயாரித்துள்ளோம். தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘கர’ படத்தால் எங்கள் படத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அந்த தலைப்பை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்.

முன்பு ‘கரா’ என்று தேடினால் எங்கள் படம் மட்டுமே வந்தது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக தனுஷ் படம்தான் முன்னிலையில் வருகிறது.

‘கரா’ என்பது ஆண் முதலைக்கான பெயர். அந்த படத்தின் First Look போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார்.

நடிகர் சங்கத்தில் எங்கள் தலைப்பை முறையாக பதிவு செய்திருந்தாலும், எங்களுக்கு உரிய தகவல்கள் வழங்கப்படவில்லை.

‘கர’ மட்டுமல்ல, ‘KARA’ என்ற ஆங்கில வடிவிலும் அந்த பெயரை பயன்படுத்தக் கூடாது. தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்முறையும் மிகவும் திருப்திகரமாக இல்லை…” என்றார்.

இதனைத் தொடர்ந்து ‘கரா’ படத்தின் இயக்குநர் விஜய் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்:

“மூன்றாண்டுகளாக ‘கரா’ படத்தை உருவாக்கி வருகிறோம். 2022ஆம் ஆண்டு அதன் First Look-ஐ விஜய் சேதுபதி வெளியிட்டார். இந்த தலைப்பு எங்களுக்கு ஒரு அடையாளம். அது எங்களின் வாழ்க்கையுடன் இணைந்த ஒன்று.

தனுஷ் சார் எங்களை நேரடியாக அழைத்து பேச வேண்டும். இந்த விவகாரத்திற்கு விரைவில் சரியான தீர்வு கிடைக்க வேண்டும்….” எனக் கூறினார்.

Our Score