நானா டெர்ரரிஸ்ட்..? வசந்தபாலனின் பதில்..!

நானா டெர்ரரிஸ்ட்..? வசந்தபாலனின் பதில்..!

‘காவியத்தலைவன்’ பிரஸ் மீட்டில் நடிகர் சித்தார்த் பேசும்போது இயக்குநர் வசந்தபாலனை ‘டெர்ரரிஸ்ட்’ என்று வர்ணித்தார். வசந்தபாலன் ஒரு டெர்ரரிஸ்ட் போல ஆர்ட்டிஸ்களை வேலை வாங்கியதாக அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

இதற்குப் பதில் சொன்ன இயக்குநர் வசந்தபாலன்,  “வெயில்’ படத்தை சரியான ஷுட்டிங் நாட்கள்ல முடிச்சேன். ‘அங்காடி தெரு’ படத்துக்காக ரங்கநாதன் தெருவுல, அவ்ளோ பெரிய கூட்டத்துக்கு நடுவுல படம் எடுக்கிறது உங்களுக்கே தெரியும் எவ்வளவு பெரிய வலின்னு..? புது கேமிராமேன்.. புது டெக்னீஷியன்.. புதுமுக நடிகர்கள்.. அதுக்குள்ள ஷூட் செய்யறது பெரிய வலியும், வேதனையுமான விஷயம்…  ‘அரவானும் உங்களுக்குத் தெரியும். எல்லாருக்கும் பச்சை குத்தி, விக் வைச்சு.. பழைய செருப்பை மாத்தி.. அவங்களை ஸ்பாட்டுக்கு கொண்டு வந்து நிறுத்தவே 11 மணியாயிரும். இப்படி ஒரு நல்ல கேன்வாஸ்ல.. நல்ல சினிமாவை எடுக்கிறதுக்கான வேட்கைலதான் இந்த ‘டெரரிஸ்ட்’ன்ற பட்டம் எனக்குத் தெரியாம வந்திருச்சு…” என்றார்.

இந்த நாட்டுல நல்லதுக்குக் காலமில்ல ஸார்..! 100 சதவிகித உழைப்பை வாங்கணும்னா இயக்குநர், இப்படி கெட்ட பெயர் எடுத்துதான் ஆகணும்..!

Our Score